அன்று முதல் இடத்திற்கு அவ்வளவு சண்டை போட்டுவிட்டு தற்போது பணப்பெட்டியுடன் வெளியேறுவது ஏன் – சிபி கொடுத்த விளக்கம்.

0
523
ciby
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சிபி பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறி இருக்கும் நிலையில் தற்போது அவர் அதற்காக சொன்ன காரணம் பற்றிய வீடியோ வெளியாகி இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி 93 நாட்களை கடந்து மிகவும் பரபரப்பாக என்று கொண்டு இருக்கிறது. 20 பேர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 13 பேர் வெளியேறி இருக்கும் நிலையில் பிரியங்கா, தாமரை செல்வி, ராஜு, பாவனி, சிபி, அமீர், நிரூப் என்று 7 பேர் மட்டுமே உள்ளே இருக்கின்றனர். இதில் Ticket To Finale டாஸ்க்கை வென்று அமீர் நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்று விட்டார். இப்படி ஒரு நிலையில் அமீரை தவிர இந்த வாரம் அனைவரும் நாமினேட் ஆகி இருக்கின்றனர். இதனால் இந்த 6 பேரில் யார் வெளியேற போகிறார் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

-விளம்பரம்-

இந்த சீசன் அடுத்த வாரம் நிறைவடைய இருக்கும் நிலையில் இந்த சீசனுக்கான பணப் பெட்டி டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் 3 லட்ச ரூபாய் பணப் பெட்டியுடன் பிக் பாஸ் வீட்டிற்கு சென்று இருந்தார் கமல். மேலும், அந்த மூன்று லட்ச ரூபாய் பணத்தை யாரும் எடுத்துக்கொள்ளவில்லை என்பதால் 5 , 6, 7 என்று படிப்படியாக தொகை ஏறிக்கொண்டே போனது.

- Advertisement -

நேற்று 9 லட்சத்துடன் முடிந்த டாஸ்க் :

நேற்றய நிகழ்ச்சி இறுதிவரை பெட்டியில் 9 லட்ச ரூபாய் இருந்தது. இன்று வெளியான முதல் ப்ரோமோவில் பெட்டியில் 11 லட்ச ரூபாய் என்று இருந்தது. அப்போது அமீர் அதை இட்டுக்கொள்ள போகிறேன் என்று சொல்லிவிட்டு பின்னர் பிராங்க் செய்தேன் என்று கூறிவிட்டார். இந்த பெட்டியை யார் எடுத்து செல்வார் என்று மிகப்பெரிய கேள்வி நிலவி வந்தது. இந்த சீசனில் டாப் இரண்டு இடத்தில் இருக்கும் ராஜு, பிரியங்கா கண்டிப்பாக இந்த பணப் பெட்டியை எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது .

12 லட்சத்துடன் வெளியேறிய சிபி:

இபப்டி ஒரு நிலையில் பணப் பெட்டியை சிபி எடுத்துக்கொண்டு வெளியேறி இருக்கின்றார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அதுவும் அவர் 12 லட்ச ரூபாய் பணத்துடன் வெளியேறி இருக்கிறார். இது தொடர்பான ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் பேசிய சிபி, நான் முதல் இடத்தில் அன்று நின்ற போது இருந்த நம்பிக்கை இப்போ எனக்கு இல்லை அதனால் தான் இந்த பெட்டியை எடுத்துக்கொள்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

-விளம்பரம்-

சிபி சொன்ன காரணம் :

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் கூட நிரூப்பிடம் பேசிய சிபி, எனக்கு இறுதி போட்டி வரை செல்வேன் என்று நம்பிக்கை இருக்கிறது. நான் தோற்று போய்விடுவேன் என்று நான் எப்போதும் நினைக்க மாட்டேன் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பேசிய சிபி தற்போது பணப்பெட்டியுடன் வெளியேறி இருப்பது போட்டியாளர்களுக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் மிகுந்த ஷாக் தான்.

This image has an empty alt attribute; its file name is image-19-1024x534.png

சிபி ஏன் வெளியேறினார் :

மேலும், நிரூப் சொன்னது போல இந்த சீசனில் ராஜு மற்றும் பிரியங்கா தான் முதல் இடத்தை பிடிப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. மேலும், பாவனி, தாமரை, அமீர் ஆகிய மூவரில் அமீர் நேரடியாக பைனலுக்குத் தகுதி பெற்றுவிட்ட நிலையில் எஞ்சியிருப்பது நிரூப் மற்றும் சிபி இருவரும்தான். வரும் வாரத்தில் எப்படியும் ஒருவர் வெளியேறி ஆக வேண்டும். தானோ அல்லது நிரூப்போதான் எவிக்ட் ஆவோம் என நினைத்து சிபி இந்த முடிவை எடுத்தாரோ என்பது பலரின் கேள்வி.

Advertisement