எங்க அப்பா இறந்ததுக்கு பிறகு ‘குட்டு’ தான் ஆதரவு..! கண் கலங்கிய டேனி.! யார் அந்த குட்டு.! புகைப்படம் இதோ.!

0
1404

நேற்று (ஜூலை 6) ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிக் பாஸ் போட்டியாளர்கள் யாரை மிகவும் மிஸ் செய்கின்றனர் என்று பகிர்ந்து கொள்ளும்படி டாஸ்க் ஒன்றை கொடுத்திருந்தார். அப்போது அணைத்து போட்டியாளர்களும் அழுது கொண்டே தாங்கள் மிஸ் செய்தவர்களின் பெயரை கூற, டேனி தனது அப்பாவின் இழப்பிற்கு பின்னர் எனக்கு மிகவும் ஆதரவாக இருப்பது குட்டு என்று கூறியதுடன் அவரை தான் மிஸ் செய்கிறேன் என்றும் கூறி இருந்தார்.

daniel

குட்டு என்பவர் வேறு யாரும் இல்லை நடிகர் டேனியின் காதலி தான்.கடந்த ஆண்டு டேனி அளித்த பேட்டி ஒன்றில் தனது காதலி டேனிஷா பற்றி கூரும் போது “என்னுடன் நீண்ட வருடங்களாக எனக்கு உறுதுணையாக இருந்த நபர் இவர் தான். நான் நடித்த படங்கள் எப்போது வரும் என்று பல வருடங்களாக காத்துக் கொண்டு நான் கஷ்டபட்டுக் கொண்டிருந்த போது எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்” என்று கூறினார்.

டேனி சொன்னதை கேட்டு மிகவும் நிகழ்ந்து போன டேனிஷா , டேனி பற்றி கூறுகையில் “என்னிடம் எப்போதும் அவர் ஷூட்டிங் முடிந்து வந்தவுடன் அவர் நடித்ததை குறித்து பகிர்ந்துகொள்ளவார். அவர் என்னை எப்போதும் சிரிக்க வைத்து கொண்டே இருப்பார். அதானல் அவர் படங்களிலும் அப்டித்தான் இருப்பார். மேலும், அவர் ரங்கூன் படத்தில் சீரியஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதுவும் எனக்கு பிடித்திருந்தது.

Denisha

அவரால் எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க முடியும். நடிப்பில் மட்டுமல்ல மற்ற எல்லா விடயத்திலும் அவருக்கும் நிறைய திறமைகள் இருக்கிறது. நான் விஸ்காம் படித்திருந்தால் எனக்கு தெரியும் இவரால் நடிக்க முடியும், திரைக்கதை அமைக்க முடியும் என்று. இவர் மிகவும் திறமையானவர் ” என்று தனது காதலர் டேனியை பற்றி நெகிழ்ச்சியாக கூறியிருந்தார்.