இரவு 3 மணிக்கு டேனியை சந்தித்த சூர்யா..! சூர்யா கேட்டதை செய்த டேனி.! என்ன நடந்தது தெரியுமா..?

0
1810

தமிழில் 2013 ஆம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான “இதற்கு தானே ஆசை பாட்டாய் பால குமாரா” படத்தில் சுமார் மூஞ்சி குமாரு என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் பதிந்தவர் டேனி அனி போப். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சில் போட்டியாளராக பங்குபெற்று வருகிறார்.

Daniel-in-Bigg-Boss

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபடாதா சில காட்சிகளை மார்னிங் மசாலா, மிட்னயிட் மசாலா என்று ஹாட் ஸ்டாரின் ஒளிபரப்பபட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பான மோர்னிங் மசாலா வீடியோ ஒன்றில் நடிகர் டேனி, நடிகர் சூர்யாவிடம் பாராட்டை பெற்ற சம்பவம் குறித்து கூறியள்ளார்.

இதுகுறித்து நடிகர் சென்றாயனுடன் பேசிக்கொண்டிருந்த டேனி “நான் கார்த்திக்கின் ”பையா” படத்தில் நடித்துள்ளேன். அதன் பின்னர் சூர்யா, நடித்த ஒரு படத்தின் படப்பிடிப்பில் நான் இருந்தேன். அவர் ஒரு சிறந்த நடிகர் , எப்படிபட்ட வசனமாக இருந்தாலும் ஒரே டேக்கில் பேசி முடித்து விடுவார். ஏதாவது டெக்ககள் தவறு என்றால் மட்டும் தான் ரீ-டேக் எடுப்பார்.

surya

அன்று சுமார் இரவு 3 மணி அளவில் அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து அவருடைய காரில் 3 பாதுகாவர்களுடன் கிளம்பினார். அப்போது நான் வெளியே நின்றுகொண்டிருப்பதை பார்த்தவுடன் என்னை அழைத்து ‘நீங்கள் தானே ஃபிரண்டு லவ் மேட்டரு’ வசனத்தை பேசினீர்கள், நான் அந்த படத்தை பார்க்கவில்லை. ஆனால், என்னுடைய தம்பி அடிக்கடி கூறுவான். எனக்காக அந்த வசனத்தை பேசும்படி கேட்டார். பின்னர் நான் பேசியதும் அவர் சிரித்துக் கொண்டே சூப்பர் என்று கூறினார்’ என்று டேனி கூறியுள்ளார்.