பிக் பாஸ் வீட்டில் பாலியல் பிரச்சனை.! கமலிடம் டேனி குமுறல்.! யார் அந்த போட்டியாளர்.?

0
304

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று எந்த வாரமும் இல்லாத அளவிற்கு கமல் சற்று காட்டமாக போட்டியாளர்களிடம் பேசி இருந்தார். அதிலும் குறிப்பாக இந்த வரம் முழுக்க பிக் பாஸ் வீட்டில் வரம்பு மீறியும், ஆக்ரோஷமாகவும் நடந்து கொண்ட மஹத்தை கமல் அவர்கள் வறுத்தெடுத்தார்.

daniel

நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் பிக் பாஸ் அரங்கில் இருந்த ரசிகர்கள் அனைவரும் கமலிடம், மஹத், யாஷிகா, ஐஸ்வர்யாவை கண்டியுங்கள் என்று குரல் எழுப்பினர், இதனால் கமல் அவர்கள் நேற்று மஹத்தை சரமாறியான கேள்விகளை கேட்டு வறுத்தெடுத்தார்.

கமல் பேசிக்கொண்டிருக்கையில் மஹத் செய்த சில தவறுகளை சுட்டி காட்டிய டேனி பிக் பாஸ் வீட்டில் உடல் ரீதியாக தாக்குதல் இருப்பதாகவும், பாலியல் வல்லுறவு ( sexual assault )நடந்ததாகவும் கூறியிருந்தார். மேலும், டாஸ்கின் போது மஹத் தன்னை கடித்ததாகவும், தன்னை பெண் போல நடக்கிறார் என்று பல முறை கூறியதாகவும் குற்றச்சாட்டை வைத்திருந்தார் டேனி.

bigg-boss

இந்த வாரம் நடைபெற்ற உத்தம வில்லன் டாஸ்கின் போது மஹத் சைக்கோ போல நடந்து கொண்டார். மும்தாஜ் மீது தனிப்பட்ட விரோதத்தில் இருந்த மஹத், மும்தாஜை வயது வித்யாசம் பார்க்காமல் கீழ்த்தனமாக நடந்து கொண்டார். அதே போல டேனியை பல முறை அடிக்க முயன்றார் மஹத். மேலும், மும்தாஜை ஆண், என்றும் டேனியை பெண் என்றும் கேவலமாக கமெண்ட் செய்திருந்தார் மஹத். இதனால் தான் டேனி, பிக் பாஸ் வீட்டில் பாலியல் வல்லுறவு ( sexual assault ) இருப்பதாக கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.