விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்குபெற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் டேனி. ஆனால், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னதாகவே பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தில் ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு என்ற கதாபாத்திரத்தில் இவர் பேசிய ‘பிரெண்டு லவ் மேட்டரு’ என்ற வசனத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தார்.
அதன் பின்னர் இவருக்கு பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பும். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த டேனி மேடையில் தனது காதலியான டெனிஷா குறித்து மிகவும் உருக்கமாக பேசி இருந்தார். பல ஆண்டுகளாக டெனிஷாவை காதலித்து வரும் டேனி வெளியே சென்றதும் அவரை திருமணம் செய்துகொள்வேன் என்றும், தனது திருமணத்தை கமல் முன் நின்று நடத்த வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
டேனி கூறியது போலவே வெளியே சென்றதும் தனது நீண்ட வ்ருட காதலியான டெனிஷாவை திருமணம்செய்துகொண்டார். 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் தேதி தனது காதலி டெனிஷாவை பதிவு திருமணம் செய்து கொண்ட டேனி, திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்பகிர்ந்தார்.
டேனி கூறியது போலவே தனது நீண்ட நாள் காதலியான டெனிஷாவை கரம் பிடித்துள்ள செய்தி ரசிகர்களுக்கு இன்ப செய்தியாக அமைந்தது. இந்த நிலையில் டேனிக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தியை மிகவும் மகிழ்ச்சியாக தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் டேனி.