பிக் பாஸ் நேற்றைய நிகழ்ச்சியில் கடந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டிருந்த பாலாஜி, டேனி, ஜனனி ஆகியோர்களில் டேனி வெளியேற்றப்பட்டார். ஏற்கனவே வித்யாசமாக நடந்த ஒரு சில எலிமினேஷன் போலவே நேற்றும் நடபைபெற்றது.
நேற்றைய நிகழ்ச்சியில் நாமினேஷனில் இருந்த மூவரையும் அகம் டிவி முன்பு வைக்கப்பட்டிருந்த மேஜை மீது நிக்க வைத்தார் கமல். பின்னர் அந்த மேஜை மீது வைக்கப்பட்டிருந்த கப்பின் ஒரு ஒரு போட்டியாளரையும் ஒவ்வொன்றாக எடுக்க வைத்தார். இதில் யாருக்கு அந்த கப்பின் உள்ளே பச்சை நிற பந்து கிடைக்கிறதோ அவர்கள் சேப் என்று என்று கூறுகிறார்.
இதில் பாலாஜிக்கு மட்டும் பச்சை நிற பந்து கிடைத்துவிட, டேனி மற்றும் ஜனனி இவர்களில் இருவரில் காப்பற்ற பட்டார் என்று அறிந்துகொள்ள மற்றொரு விளையாட்டை வைத்த கமல் இருவரையும் ஒரு சின்ன பெட்டிக்குள் அனுப்பி பின்னர் அந்த அறையை பூட்ட சொல்லிவிட்டு அந்த சாவியை ஸ்டோர் ரூமில் வைத்துவிட கூறுகிறார்.
அதன் பின்னர் ஜனனி மற்றும் டேனி இருந்த அந்த சின்ன பெட்டிக்குள் அருகில் 5 சாவிகளும் வாய்க்கபட்டிருந்தது அதில் ஒரு சாவி மட்டுமே ஒரு அறையை திறக்கும் என்று கூறுகிறார். இறுதியில் சென்ராயன் எடுத்த சாவி , டேனி இருந்த பேட்டியை திறக்க டேனி வெளியேற்றபட்டார் என்ற அட்டையை காண்பித்தார் கமல். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை நடைபெறாத அளவிற்கு வித்யாசமான முறையில் நடைபெற்ற இந்த எலிமினேஷன் போட்டியாளர்களுக்கு, பார்வையார்களும் மிகவும் சுவாரசியமா அமைந்தது.