சொல்லப்போனால் தற்போது இருக்கும் சாண்டி போல இரண்டாவது சீசனில் டேனி இருந்து வந்தார்.ஆனால், இவரின் டபுள் சைட் கேமால் தான் இவர் பிக் பாஸ் நிகச்சியில் இருந்து வெளியேறினார் என்பது தான் மறுக்க முடியாத உண்மை. இருப்பினும் டேனிக்கும் பல ரசிகர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற டேனியிடம் பிக் பாஸ் இரண்டாம் சீசன் குறித்தும் பிக் பாஸ் குறித்தும் பல்வேறு கேள்விகளை கேட்டிருந்தனர்.அப்போது ஓட்டிங் பற்றி பேசி இருந்த அவர் நிஜமாக எனக்கு ஓட்டிங் சிஸ்டம் நியாயமாக நடக்கிறதா என்ற ஒரு சந்தேகம் உள்ளது.
இதையும் பாருங்க : திருமணமான நிலையில் படு மோசமான நீச்சல் உடையில் போஸ் கொடுத்த ஸ்ரேயா.!
அந்த சந்தேகம் கடந்த ஆண்டு ஒளிபரப்பான இரண்டாவது சீசனிலேயே வந்துவிட்டது. அதிலும் சென்ட்ராயன் வெளியேறியபோது தான் அந்த சந்தேகம் எனக்கு மேலும்அதிகமானது என்றார். மேலும், தற்போது ஒளிபரப்பாகி வரும் இரண்டாவது சீசனில் யார் வெளியேறினால் நன்றாக இருக்கும் என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த டேனி, இந்த வாரம் வனிதா வெளிறினால் நன்றாக இருக்கும் என்று கூறிய டேனி, மதுமிதா மிகவும் கத்துகிறார் ஆனால், தனியாக சென்று கத்துகிறார். இருப்பினும் அவர் மன ரீதியாக வலிமையாக தான் இருக்கிறார். சாக்க்ஷி அனைவரையும் பயமுறுத்துகிறார் என்று கூறியுள்ளார் டேனி.