தனம் வாடா போடனு பேசுனத மட்டும் தான promoல பாத்தீங்க – இந்த முழு வீடியோவ பாருங்க புரியும். குறும்படம் போட்ட நெட்டிசன்கள்.

0
454
dhanam
- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் மீண்டும் சர்ச்சையில் சிக்கிய தனலட்சுமி – மணிகண்டன். ஒருத்தரை ஒருத்தர் மோதிக்கொள்ளும் சண்டை வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி தற்போது ஐந்தாவது வாரம் சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம், அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இதில் பலர் புது முகங்களாக இருக்கிறார்கள். இந்த முறை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பிக் பாஸ் பல மாற்றங்களை செய்து இருக்கிறார். பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருக்கிறார். அடுத்து என்ன வழக்கம் போல் போட்டியாளர்கள் மத்தியில் கலவரம், சண்டைகளும் தொடங்கி நிகழ்ச்சி பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் அதிக ரசிகர் பட்டாளம் கொண்ட ஜிபி முத்து குடும்பத்தின் மீது இருந்த ஏக்கத்தின் காரணமாக தாமாகவே நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார்.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6:

இது பலருக்கும் அதிர்ச்சியை தந்தது. இவரை தொடர்ந்து முதல் எவிக்சனில் மெட்டிஒலி சாந்தி வெளியேறி இருந்தார். பின் இரண்டாவது எவிக்சனில் அசல் வெளியேறி இருந்தார். கடந்த வாரம் குறைந்த வாக்குகள் பெற்று ஷெரினா வெளியேறி இருக்கிறார். இந்த வாரம் பேக்டரி டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அட தேனடை, கண்ணா லட்டு தின்ன ஆசையா என்று இரு அணிகளாக பிரிந்து தங்களுடைய ஸ்வீட்டுகளை தயாரித்து விற்பனை செய்கிறார்கள்.

பேக்டரி டாஸ்க்:

இதற்கு நடுவராக ஆயிஷா, ராம் இருந்து ஆலோசனை கூறுகிறார்கள். நேற்றைய எபிசோடிலேயே அசீம், விக்ரமன் டீம் செய்தது சரி இல்லை என்று பல குறைகளை கூறியிருந்தார்கள். இதனால் நடுவர்களுக்கும் போட்டியாளர்களுக்கும் இடையே சண்டை பயங்கரமாக முற்றியது. இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான ப்ரோமோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில் மணிகண்டன்- தனலட்சுமி இருவரும் பயங்கர சண்டை போட்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

தனலட்சுமி-மணிகண்டன் சண்டை:

அதாவது, இரு அணிகளும் இனிப்புகளை தயாரிப்பதற்காக பொருள்களை சேகரித்து வருகின்றனர். அப்போது மணிகண்டன், தனலட்சுமியின் கையில் இருந்த ஒரு பொருளை பிடுங்குகிறார். இதனால் தனலட்சுமி கீழே விழுகிறார். உடனே ஆத்திரம் அடைந்த தனலட்சுமி, மணிகண்டனிடம் சண்டைக்கு சென்றிருக்கிறார். இருவருமே பயங்கரமாக அடித்துக் கொள்ளும் அளவிற்கு சண்டை போட்டிருக்கிறார்கள். வீட்டில் உள்ள பிற போட்டியாளர்கள் இருவரையும் விலக்க நினைத்து இருக்கிறார்கள். பின் மணிகண்டன் தள்ளிவிட்டதாக தனலட்சுமி அவரிடம் சண்டை போடுகிறார். அதற்கு மணிகண்டன், நான் உங்களை தள்ளவில்லை,

இழுக்கவில்லை.

சவால் விட்ட தனம்:

ஆனால், உங்கள் கையில் இருந்த அந்த பொருளை பிடிங்கினேன் என்று கூறினார். கேமராவில் எல்லாம் பதிவாகி இருக்கிறது. உண்மை தெரிந்த விடும் என்று சொல்கிறார். அப்போது கோபத்தில் தனலட்சுமி, மணிகண்டனிடம் தைரியம் இருந்தால் அடித்து பார் என்று சவால் விடுகிறார். உடனே மணிகண்டனை அமைதிப்படுத்த அசீம், நான் செய்த தவறை நீயும் செய்யாதே என்று சமாதானம் சொல்கிறார். ஆனால், உண்மையில் தனலட்சுமி பொம்மையை எடுத்துவிட்டார். மணிகண்டன் தான் அவரது கையில் இருந்து வேண்டுமென்றே அவரது பொம்மையை எடுத்து இருக்கிறார் என்பது இந்த வீடியோ மூலம் தெரிகிறது.

Advertisement