அப்பா இல்லைனு சொன்னீங்க, அப்போ இது என்ன – தன் தந்தையுடன் ரீல்ஸ் செய்துள்ள தனலட்சுமி.

0
743
dhanalakshmi
- Advertisement -

தன் அப்பாவுடன் சேர்ந்து பிக் பாஸ் தனலட்சுமி செய்த ரீல்ஸ் வீடியோவை சோசியல் மீடியாவில் பதிவிட்டு நெட்டிசன்கள் விமர்சித்து வரும் பதிவு வைரல் ஆகி வருகிறது. டிக் டாக் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தனலட்சுமி. சிறுவயதிலேயே நடிப்பதில் ஆர்வம் கொண்ட இவர் சில படங்களிலும், பறை இசை ஆல்பத்திலும் நடித்து இருக்கிறார். தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார். இந்த நிகழ்ச்சி தொடங்கி தற்போது ஐந்தாவது வாரம் சென்று கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த முறை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பிக் பாஸ் பல மாற்றங்களை செய்து இருக்கிறார். வழக்கம் போல் போட்டியாளர்கள் மத்தியில் கலவரம், சண்டைகளும் தொடங்கி நிகழ்ச்சி பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல், ஷெரினா ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். மேலும், இதுவரை நடந்த ஏகப்பட்ட சர்ச்சைகளில் தனலட்சுமி தான் சிக்கி இருந்தார்.

- Advertisement -

தனலட்சுமி குறித்த தகவல்:

இவர் பிக் பாஸில் கலந்துகொண்ட முதல் நாளில் இருந்தே பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார். இருந்தாலும், தனலட்சுமி பக்கம் நியாயம் இருக்கிறது என்று கமலும், மக்களும் அவருக்கு ஆதரவு கொடுத்திருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் தனலட்சுமி குறித்து அவருடைய நண்பர்கள் பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார்கள். அதில் அவர்கள் கூறியிருப்பது, தனலட்சுமி இரண்டு படம் நடித்திருக்கிறார். ரெண்டு படமும் வெளியாகவில்லை.

தனலட்சுமி நண்பர்கள் அளித்த பேட்டி:

ஒரு படத்தின் புரமோசனுக்காக தான் அவள் அவார்டு ஈவண்ட்டை நடத்தி இருந்தார். அந்த நிகழ்ச்சியை நடத்தியதே அவள் தான். காசு இல்லாமையா அவள் அந்த நிகழ்ச்சியை நடத்துவாள். நிகழ்ச்சியில் அவள், நான் ரொம்ப கஷ்டப்பட்டு வந்தேன். நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கடன் வாங்கி துணி வாங்கினேன் என்று சொல்வதெல்லாம் பொய். அதையெல்லாம் அவள் சொல்லும்போது கேட்க நாராசமாக இருந்தது. அவளுக்கு அப்பா இருக்கிறார்.

-விளம்பரம்-

தனலக்ஷ்மியின் உண்மை முகம்:

அவர் மெக்கானிக்கல் ஷாப் நடத்தி இருக்கிறார். அவருடன் சேர்ந்து எல்லாம் அவள் வீடியோ போட்டு இருக்கிறார். அம்மா துணிக்கடையை நடத்தி வருகிறார். அது மட்டும் இல்லாமல் பைனாஸ் செய்கிறார். சொல்லப்போனால், அவள் நடித்த இரண்டு படத்தையும் எடுத்ததே அவர்கள் தான். அந்த அளவிற்கு பணம் இருக்கிறது. MLM விளம்பரம் மூலம் பல பேரை ஏமாற்றி சம்பாதித்து இருக்கிறார். செருப்பு மட்டுமே 12 ஆயிரத்துக்கு எடுப்பா. அவள் பணம் இல்லை என்று சொல்வதெல்லாம் பொய் என்று கூறி இருக்கிறார்கள். இப்படி தனலட்சுமி நண்பர்கள் அளித்த பேட்டியை அடுத்து நெட்டிசன்கள் பலரும் தனலட்சுமி உடைய ரீல்ஸ் வீடியோக்களை தேட ஆரம்பித்தனர்.

விமர்சிக்கும் நெட்டிசன்கள்:

அப்போது அவர் தந்தையுடன் செய்த ரீல்ஸ் வீடியோக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து விமர்சித்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது தனலட்சுமி எனக்கு சிகரெட் என்றாலே என்னவென்று தெரியாது என்று ஜனனியிடம் கூறியிருந்தார். ஆனால், இவர் சிகரெட் பிடிப்பது போன்ற ஒரு வீடியோவையும் பதிவிட்டு இருக்கிறார்கள். பிக் பாஸ் வீட்டில் தனலட்சுமி தன்னை நல்லவராக காண்பிக்க தான் இப்படி எல்லாம் கூறியிருக்கிறார் என்றும், தனலட்சுமி பேசிய அனைத்துமே பொய் என்றும் அவருடைய உண்மை முகத்தை கிழித்து எடுத்து வருகின்றனர்.

Advertisement