தேவ இல்லாத ஆணி, அவர் பிக் பாஸுக்கு தகுதியே இல்லாத ஆள் – Evictionக்கு பின் தனலட்சுமி அளித்த முதல் Live பேட்டி.

0
625
dhanalakshmi
- Advertisement -

பிக் பாஸில் இருந்து வெளியேறி இத்தனை நாட்கள் ஆன நிலையில் தனலட்சுமியின் Live வீடியோவை மட்டும் இன்னும் டிஸ்னி ஹாட்ஸ்டார் வெளியிடவில்லை. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 87 நாட்களை கடந்து இருக்கிறது. மேலும், இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ஜனனி, ராம், ஆயிஷா, தனலட்சுமி,மணிகண்டன் ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். தற்போது 8 பேர் மட்டும் விளையாடி வருகின்றனர்.

-விளம்பரம்-

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற நாமினேஷனின் அமுதவாணன் மற்றும் Adkவை தவிர அசீம், விக்ரமன், ஷிவின், மைனா நந்தினி, தனலட்சுமி, ரச்சித்தா, கதிரவன் ஆகிய 7 பேர் நாமிநெட் ஆகி இருந்தனர். இதில் கதிர், ரச்சிதா அல்லது மைனா நந்தினி தான் வெளியேறுவார்கள் என்று பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்யும் வகையில் தனலட்சுமி வெளியேறி இருந்தார்.

- Advertisement -

இந்த சீசனில் ஒரு சாதாரண பெண்ணாக அறிமுகமான தனலட்சுமி டிக் டாக் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தனலட்சுமி. சிறுவயதிலேயே நடிப்பதில் ஆர்வம் கொண்ட இவர் சில படங்களிலும், பறை இசை ஆல்பத்திலும் நடித்து இருக்கிறார். இவர் பிக் பாஸில் கலந்துகொண்ட முதல் நாளில் இருந்தே பல சர்ச்சைகளில் சிக்கி இருந்தார். இதனால் ரசிகர்கள் மத்தியில் வெறுப்பையும் சம்பாதித்தார்.

தனலட்சுமி என்னதான் வெறுப்பை சம்பதித்தாலும் அவர் இந்த வாரம் எலிமினேட் ஆகி இருப்பதை பலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனெனில் பிக் பாஸ் வீட்டில் ஒன்றுமே செய்யாமல் இருக்கும் கதிர், ரச்சிதா, எப்போதும் புறம் பேசிக்கொண்டு இருக்கும் Adk, காமெடி என்ற பெயரில் ரசிகர்கள் மத்தியில் Cringe பெயரை எடுத்த மைனா போன்றவர்கள் எல்லாம் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது தனலட்சுமி வெளியேறியது தான் ஆச்சரியமே.

-விளம்பரம்-

என்னதான் தனலட்சுமி அடிக்கடி வாயை விட்டு சர்ச்சையில் சிக்கினாலும், டாஸ்க்கிலும் சரி கண்டன்ட் கொடுத்ததில் சரி, தனலட்சுமி மேலே குறிப்பிட்ட போட்டியாளர்களை விட பல படி மேல் தான். பொதுவாக பிக் பாஸில் இருந்து வெளியேறும் போட்டியாளர்களை அவர்கள் வெளியேறிய அடுத்த நாளே லைவில் பேட்டி எடுத்து ஹாட் ஸ்டார் வெளியிடும். ஆனால், தனலட்சுமி வெளியேறி இத்தனை நாட்கள் ஆகியும் அவரது லைவ் மட்டும் இன்னும் வரவில்லை.

இப்படி ஒரு நிலையில் தனலட்சுமி முதன் முறையாக லைவ் வந்து இருக்கிறார். அதில் பேசிய தனலட்சுமி ‘பிக்பாஸ் வீட்டில் விக்ரமன், ஏடிகே இருவரையும் தனக்கு பிடிக்கவில்லை. விக்ரமன் பிக்பாஸுக்கு தகுதியே இல்லாத ஒரு ஆள். பிக் பாஸ் வீட்டில் எனக்கு  பிடித்த போட்டியாளர்கள் அசீம், மணி, கதிரவன் ஆகிய மூவர்தான், ரட்சிதா, மைனா, அமுதவாணன், கதிர் ஆகியோர் இன்று வரை தங்களது உண்மையான முகத்தை இதுநாள் வரை காட்டவில்லை’ என்று கூறியுள்ளார் தனலட்சுமி.

Advertisement