விக்ரமன் – கிருபா விவகாரம் – மோகன் ஜி, அசீமை தொடர்ந்து விக்ரமனை மறைமுகமாக தாக்கிய தனலட்சுமி.

0
1567
- Advertisement -

கடந்த சில தினங்களுக்கு முன்னர் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் கிருபா முனுசாமி விசிக தலைவர் திருமாவளவனுக்கு கடிதம் ஒன்று எழுதி இருக்கிறார்.அதில் அவர், “தொல்.திருமாவளவன் அவர்களுக்கு, என் பெயர் கிருபா முனுசாமி. உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறேன். நான் கடந்த 2020- ஆம் ஆண்டு மத்திய அரசின் சமூக நீதி அமைச்சகத்தின் National Overseas Scholarship-இன் மூலம் லண்டனில் சட்டத் துறையில் முனைவர் பட்டப்படிப்பில் ஆராய்ச்சி செய்து வருகிறேன்.

-விளம்பரம்-

நான் ஜாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக தொடர்ந்து நீதிமன்றங்களிலும் பொதுத்தளங்களிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறேன் என்பது தாங்கள் உட்பட பலரும் அறிந்ததே! தங்கள் கட்சியின் இணை செய்தி தொடர்பாளர் விக்ரமன் அரசியல் நிகழ்ச்சிகளின் மூலமாக என்னுடன் நட்பாய் இருந்து நான் லண்டனுக்கு சென்றபிறகு என்னை காதலிப்பதாக கூறினார்.அவருக்கும் முற்போக்கு அரசியலில் பிடிப்பு இருந்தது போல தோன்றியதால் நான் சம்மதித்தேன்.

- Advertisement -

நாங்கள் பழகி வந்த இந்த மூன்று ஆண்டு காலத்தில் என்னை பலமுறை வேசி என்றும் பிற ஆபாச வார்த்தைகளாலும் விக்ரமன் அவமானப்படுத்தியிருக்கிறார். ஒரு தலித்தாக இருப்பதினாலேயே எனக்கு அரசியல் ஆதாயம் கிடைப்பதாக குற்றஞ்சாட்டியிருக்கிறார். ஒரு கணவன் மனைவியைப் போல குடும்பம் நடத்துவதாக என்னை உணர வைத்து பணம் செலவு செய்ய வைத்தார் என்று குற்றம் சாட்டி இருந்தார்.

மேலும், விக்ரமன் . விக்ரமன் தன்னுடன் காதலில் இருந்த நேரத்தில் தனது மேனேஜர் என கூறிக்கொண்டு இன்னொரு பெண்ணுடன் உறவில் இருந்தார்.  அதை அவரே என்னிடம் ஒப்புக்கொண்டார். 1.5 வருடமாக இப்படி ஏமாற்றி இருக்கிறார். இதற்கு முன்பு 15 பேரை விக்ரமன் இப்படி காதல் என்கிற பெயரில் ஏமாற்றி இருக்கிறார்.அவரை பற்றி கட்சியில் புகார் அளித்தேன், இது பற்றி விசாரணை நடந்த குழு அமைத்தார்கள். என் தரப்பில் உண்மை இருப்பதை குழுவும் ஒப்புக்கொண்டிருக்கிறது.”கட்சியின் தலைவர் மீது கூட விக்ரமன் மரியாதையுடன் பேசியது இல்லையாம்.

-விளம்பரம்-

தலைவர் பற்றி மோசமாக விக்ரமன் தாக்கி பேசி இருக்கும் வாட்சப் உரையாடல்களையும் கிருபா முனுசாமி வெளியிட்டு இருந்தார். இவரின் இந்த பதிவை தொடர்ந்து பிக் பாஸ் அசீம் ‘ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீ பற்ற வைத்த நெருப்பொன்று பற்றி எரிய உனைகேட்க்கும், நீ விதைத்த வினையெல்லாம் உனை அறுக்க காத்திருக்கும். ( என் தத்துவம் ரீச் ஆகும், என்ன கொஞ்சம் லேட்டா ஆகும் ) – என்று பதிவிட்டுள்ளார். அஸீமின் இந்த பதிவு விக்ரமனை குறிப்பிடுவது போலவே இருக்கிறது என்று ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர்.

அதே போல இயக்குனர் மோகன் ஜி, கிருபாவின் புகார் பதிவை பகிர்ந்து ‘நாடக காதலுக்கு அர்த்தம் கேட்டவனுக்கு எல்லாம் இந்தா உதாரணம்… பாட்டாவே பாடி இருக்காங்க பாரு’ என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் பிக் பாஸ் தனலட்சுமி ‘, “கலப்படமான நல்லவனாக இருப்பதைவிட சுத்தமான கெட்டவனாக இருந்துட்டு போயிரலாம்” Just Post”, என்று பதிவிட்டு இருக்கிறார். இவரின் இந்த பதிவை கண்ட பலரும் விக்ரமனை குறிப்பிட்டே இப்படி போட்டுள்ளார் என்று கூறி வருகின்றனர்.

Advertisement