இந்த வீடியோ மட்டும் ஏன் ‘Unseen’ல், அவர் உங்கள் டாப் 5 லிஸ்டில் இல்லையா – தனலட்சுமிக்கு ஆதராக நெட்டிசன்கள் கேள்வி.

0
692
dhanam
- Advertisement -

டிக் டாக் தனலட்சுமிக்கு ஆதரவாக விஜய் டிவியை எதிர்த்து ரசிகர்கள் பதிவிட்டு வரும் பதிவு சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி 10 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து, அசீம், அசல் கொலார், ராபர்ட், ஷெரினா, ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி, சிவின் கணேசன் மற்றும் நிவாஷினி என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த முறையும் பலர் புது முகங்களாக இருக்கின்றனர். இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம் போல் கமல் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார். இந்த முறை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்து இருக்கிறது. மேலும், முதல் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி எண்ட்ரியாகி இருக்கிறார்.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6:

கடந்த ஒரு வாரம் ஒளிபரப்பான நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இரண்டாம் வாரம் தொடக்கத்தில் பிக் பாஸ் வீட்டின் முதல் தலைவருக்கான போட்டி நடந்து இருக்கிறது. அதில் மெட்டி ஒலி சாந்தி, ஜனனி, ஜி பி முத்து கேப்டன் தலைவருக்கான போட்டியில் பங்கேற்று இருந்தார்கள். அதில் ஜி பி முத்து இந்த வார தலைவர் ஆகியிருக்கிறார். பின் அவர் வீட்டில் ஒவ்வொரு அணியினரும் என்ன வேலை? செய்ய வேண்டும் என்று பிரித்துக் கொடுத்து இருந்தார்.

கதை சொல்லும் நேரம்:

மேலும், இரண்டாம் வாரத்திற்கான டாஸ்கை பிக் பாஸ் கொடுத்து இருக்கிறார். அதில், ஒவ்வொரு போட்டியாளர்கள் கதை ஒன்று சொல்ல வேண்டும். அப்படி போட்டியாளர்கள் சொல்லும் கதை பிடிக்கவில்லை என்றால் பஸர் அடித்து கதையை நிறுத்தலாம். இதற்கு கதை சொல்லும் நேரம் என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இதில் எந்த போட்டியாளர் இறுதிவரை கதையை சொல்லி முடிக்கிறாரோ அவர் இந்த வாரத்திற்கான நாமினேஷனில் இருந்து காப்பாற்றப்படலாம் என்று பிக் பாஸ் அறிவித்திருக்கிறார்.

-விளம்பரம்-

ஜனனி,அசிம் ப்ரோமோ:

இதனை அடுத்து அசீம், ஜனனி இருவருமே தங்களுடைய கதையை சொல்லி இருக்கிறார்கள். ஆனால், இருவரும் சொல்லிக் கொண்டிருக்கும்போதே போட்டியாளர்கள் பசரை அடித்து நிறுத்தி இருக்கிறார்கள். இதனால் இருவரும் வெளியே வந்து கதறி அழுத்திருக்கிறார்கள். அதற்கான புரோமோக்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. இந்த நிலையில் தனலட்சுமி குறித்த அன்சீன் ப்ரோமோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில், தனலட்சுமி தன்னுடைய அம்மா குறித்தும், தான் வந்த பாதை குறித்தும் ரொம்ப எமோஷனலாக சொல்லி இருக்கிறார்.

தனலட்சுமி அன்சீன் ப்ரோமோ:

இதை கேட்ட போட்டியாளர்கள் பலருமே கண் கலங்கி அழுதிருக்கிறார்கள். தற்போது இந்த புரோமோ தான் வைரல் ஆகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலருமே, ஏன் தனலட்சுமி உடைய வீடியோவை அன்சீனில் வைத்திருக்கிறீர்கள்? தனலட்சுமி உங்களுடைய டாப் 5ல் இல்லையா? அவர் நன்றாக விளையாடுகிறார். அவர் ரொம்ப தைரியமான பொண்ணு, நேர்மையான பொண்ணு என்று விஜய் டிவியை கேள்வி கேட்டு ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்கள்.

Advertisement