மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள தனியார் திரையரங்கில் அறிமுக இயக்குனர் ராஜபாண்டி இயக்கி நடித்திருக்கும் படம் திவ்யா. இந்த படத்தினுடைய முன்னோட்ட காட்சி நிகழ்வு நடைபெற்று இருந்தது. இதில்
சிறப்பு விருந்தினராக பிக் பாஸ் வாட்டர் மிலன் திவாகர் கலந்து கொண்டிருந்தார். பின் இந்த படத்தை பார்த்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த திவாகர், இந்த படத்தில் நடித்தவர்கள் எல்லோருமே புதுமுகமாக தான் இருந்தார்கள். முதலில் நடிப்பதற்கு ஒரு சிலர் கஷ்டப்படுவார்கள். ஆனால், இந்த படத்தில் அதெல்லாம் தெரியவில்லை.
https://www.youtube.com/watch?v=OF2cZpEM0HA
இயற்கையாகவே நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை பார்க்கும்போது சசிகுமார் அண்ணன் எடுத்த நந்தன் படம் போன்ற உணர்வு எனக்கு இருந்தது. சசிகுமார் அண்ணனைப் போலவே இவர்கள் பல சமுதாய சீர்திருத்த படங்களை எடுத்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். திவ்யா படத்தை நான் பார்த்துவிட்டேன். இந்த படம் எப்போது வெளியாகும் என்று மக்கள் எதிர்பார்ப்பதை போல நானும் எதிர்பார்க்கிறேன். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
திவாகர் பேட்டி:
நான் நடித்த முதல் படமே விஜய் சேதுபதி சார் உடைய ஏஸ் படம் தான். அனைவருமே என்னுடைய நடிப்பை பார்த்து விஜய் சேதுபதி போல நடிக்கிறீர்கள் என்று சொன்னார்கள். அவருடைய தயாரிப்பு நிறுவனத்தில் அழைப்பு வந்தால் கண்டிப்பாக நான் கதாநாயகனாக நடிப்பேன். அடுத்த படத்தில் நான் தான் பவானிக்கு(விஜய் சேதுபதிக்கு வில்லன்) பவானியாக நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை இருக்கிறது. மேலும், பிக் பாஸை பலரும் ஸ்கிரிப்ட் என்று சொல்கிறார்கள். ஆனால், பிக் பாஸில் எந்தவித ஸ்கிரிப்டும் கிடையாது.

பிக் பாஸ் பற்றி சொன்னது:
பிக் பாஸின் உள்ளே சென்றவுடன் எங்களை அடைத்து விடுவார்கள். அங்கு நடந்த அனைத்துமே உண்மை மாதிரி நிறைய விமர்சகர்கள் தவறான செய்திகளை பரப்புகிறார்கள்.
பிக் பாஸ் வீட்டிற்குள் சாப்பாட்டிற்கு தட்டுப்பாடு இருப்பது உண்மை. அவர்கள் சொல்லும் டாஸ்க்கை நாங்கள் செய்து கொண்டே இருப்போம். ஒரு ஸ்கூலில் படித்தால் கூட ஃப்ரீயாக இருப்போம். ஆனால், பிக் பாஸ் வீட்டில் வீட்டு வேலை காத்துக் கொண்டேன். சுடுதண்ணி கூட வைக்க தெரியாது. நான் பாத்திரம் கழுவுவதில் இருந்து டாய்லெட் கழுவுவது வரை அனைத்துமே கற்றுக் கொண்டோம்.

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி:
அதேபோல் கடந்த சில தினங்களாக எனக்கு திருமணம் ஆகிவிட்டதாக செய்திகள் பரவிக் கொண்டு வருகிறது. மூன்று பெண்களை திருமணம் செய்து கொண்டதாக சொல்கிறார்கள். ஆனால், அதெல்லாம் பொய். நான் சிங்கிளாகத்தான் இருக்கிறேன். மூன்று பெண்களை எல்லாம் திருமணம் செய்யவில்லை. என்னைப் பற்றி பொய்யான தகவல் வந்தால் அதை பரப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க இருக்கிறேன். நான் பிக் பாஸ் போன பின்னர் எனக்கு நிறைய ரசிகர்கள் வந்து விட்டார்கள். அதனால் எனக்கு கெட்ட பெயர் வர வைக்கும் விதமாக சிலர் இப்படி செய்து கொண்டு வருகிறார்கள் என்று கூறியிருக்கிறார்.






