பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த புதிய நபர்.!வித்யாசமாக நடந்த எலிமினேஷன்.!

0
25702
Sakshi
- Advertisement -

பொதுவாக வாரங்கள் செல்ல செல்ல எலிமினேஷனை வித்தியாசமான முறையில் அறிவிப்பது வழக்கம். கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டிற்குள்ளேயே எலிமிநேஷனிலிருந்து இருந்து காப்பாற்றப்பட்ட நபர்களின் பெயர் குறிப்பிடப்பட்ட அட்டைகள் வைக்கப்பட்டிருந்தது .அதனை ஒன்றின் பின் ஒன்றாக போட்டியாளர்கள் கண்டுபிடித்து நாமினேஷனில் இருந்தவர்களை காப்பாற்றியது பார்க்க மிகவும் சுவாரசியமாக இருந்தது.

-விளம்பரம்-

அதே போல இந்த முறையும் எலிமினேஷன் அறிவிப்பை வித்தியாசமான முறையில் செய்துள்ளனர். இந்தமுறை பிக்பாஸ் வீட்டிற்குள் ஜோக்கர் வேடமணிந்த ஒரு நபர் சென்றுள்ளார். அவர் இந்த வாரம் காப்பாற்றப்பட்ட நபர்களின் பெயரை ஒருவர் பின் ஒருவராக வித்தியாசமான முறையில் அறிவித்துள்ளார். இந்த வாரம் காப்பாற்றப்பட்ட நபர்களுக்கு அந்த ஜோக்கர் உடை அணிந்த நபர் பச்சை நிற பழங்களைக் கொடுத்து அவர்கள் காப்பாற்றப்பட்டுவிட்டது தெரிவித்துள்ளார்.

இதையும் பாருங்க : இந்த வாரம் வெளியேறியது இவர் தான் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு.! கூடவே புகைப்படம்.! 

- Advertisement -

அதில் முதலில் மீரா மிதுனுக்கு பச்சை நிற பழங்களை அளித்து அவர் இந்த வாரம் காப்பாற்றப் பட்டதை அறிவித்தார் ஜோக்கர். அதன்பின்னர் அபிராமி, சரவணன், சேரன் ஆகியோர் இந்த வார எலிமினேஷனிலிருந்து காப்பாற்றப்பட்டது அந்த ஜோக்கர் மூலமாக தெரியவருகிறது. இறுதியில் மோகன் வைத்யா இந்த வாரம் வெளியேற்றப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.

அதேபோல நாளைய எபிசோடில் பல சுவாரசியமான சம்பவங்களும் நடைபெற இருக்கிறது. சாண்டி மற்றும் கவின் ஆகிய இருவரும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட மோகன் வைத்யாவிற்காக ஒரு பாடலை பாடி அவரை குஷி படுத்தியுள்ளனர். அதேபோல பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த மோகன் வைத்யா மேடையில் சாண்டியின் பெயரைச் சொன்னதும் ரசிகர்கள் கார கோஷங்களை எழுப்பி ஆரவாரமும் செய்துள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement