அப்பாடா, இந்த வார ஏவிக்ஷனில் இருந்து தப்பித்த ரெண்டு பேர். ஒருத்தர் ஆரி. இன்னோருத்தர் யார் தெரியுமா ?

0
1282
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 61 நாட்களை நிறைவு செய்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா ஆகியோர் வெளியேறிய நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சம்யுக்தா வெளியேறி இருந்தார். மற்ற போட்டியாளர்கள் வெளியேறியதைவிட சம்யுக்தாவின் வெளியேற்றம் தான் கொஞ்சம் பரபரப்பாக பேசப்பட்டது. அதற்கு முக்கிய காரணமே இவர் வெளியேறுவதற்கு முன்பாக இவருக்கு குறும்படம் போடப்பட்டு இருந்தது. அதே மற்ற போட்டியாளர்கள் வழி அனுப்பி வைக்கப்பட்ட விதத்தை விட சம்யுக்தாவை மற்ற போட்டியாளர்கள் வழியனுப்பி வைத்த விதம் மிகவும் நன்றாக இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

-விளம்பரம்-

இந்த வார நாமினேஷன் அடிப்படையில் இந்த வாரம் ஆரி, சனம் ஷெட்டி, அனிதா, ஆஜித், சிவானி, ரம்யா, நிஷா ஆகிய 7 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதில் கண்டிப்பாக அஜித்,ஷிவானி, நிஷா, அனிதா ஆகிய 4 பேருக்கு கடும் போட்டிகள் எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை இந்த வாரம் இரண்டு எலிமினேஷனாக கூட இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரம் ஷிவானி அல்லது நிஷா தான் வெளியேறுவர் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால், பல்வேறு தனியார் வலைத்தளங்களில் நடத்தப்பட்டு வரும் வாக்கெடுப்பில் அனிதாவிற்கு தான் குறைவான வாக்குகள் பதிவாகி வந்தது. கடந்த வாரமே அனிதா நாமினேட் ஆகி இருந்தார். ஆனால், அவர் Nomination Topple Card- ஐ வென்று அவருக்கு பதிலாக சம்யுக்தாவை நாமினேட் செய்து விட்டார். ஒருவேளை இந்த Nomination Topple Card அறிமுகம் செய்யப்படாமல் இருந்திருந்தால் கடந்த வாரம் அனிதா வெளியேறி இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருந்திருக்கும்.

இருப்பினும் இந்த சீசன் முழுக்க எந்த ஒரு Impact-ஐயும் ஏற்படுத்ததா ஷிவானி தான் வெளியேறிவார் என்ற ஒரு கருத்தும் நிலவி வருகிறது. எனவே, அவர் இந்த வாரம் வெளியேறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இப்படி ஒரு நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் இந்த வாரம் நாமினேஷனில் இருந்த ஆரி மற்றும் ரம்யா பாண்டியனை கமல் காப்பாற்றப்பட்டுள்ளதாக அறிவித்து இருக்கிறார் என்று நம்பகரமான தகவல் வெளியாகி உள்ளது.

-விளம்பரம்-
Advertisement