வித்தியாசமாக வெளியேற்றப்பட்ட வைஷ்ணவி..! எப்படி தெரியுமா..? கமல் தான் காரணம்.!

0
304
Vaishnavi

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார நாமினேஷனலில் சென்ராயன், ஜனனி ஐயர், டேனில், வைஷ்ணவி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர், இதில் இந்த வாரம் வைஷ்ணவி வெளியேற்ற பட்டுள்ளார் என்று ஏற்கனவே ஒரு தகவலை பதிவிட்டிருந்தோம். மேலும், அந்த பதிவில் இந்த வாரம் எலிமினேஷன் வித்யாசமான முறையில் நடைபெற்றுள்ளது என்ற தகவலையும் தெரிவித்திருந்தோம்.

Kamal

- Advertisement -

அது என்னவெனில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஞாற்றுக்கிழமை தான் எலிமினேஷன் ஆகும் நபரின் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவிப்பார்.மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்வரை ஒரு நாளைக்கு முன்னதாகவே எடுக்கப்பட்ட காட்சிகளை தான் தொலைக்காட்சியில் ஒளிபரப்புகின்றனர்.

அந்த வகையில் வாரா வாரம் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தான் கமல் அவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெருவார். அதில் சனிக்கிழமை அன்று தான் எலிமினேஷனை அறிவிப்பார் கமல், அந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் மறுநாள் ஒளிபரப்பாகும்.

vaishnavi

ஆனால், இந்த வாரம் வெள்ளிகிழமையே (அதாவது நேற்று ) கமல் அவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த்து வெளியேற போகும் நபரின் பெயரை அறிவித்துவிட்டார். கமல் அவர்களுக்கு வேறு சில பணிகள் இருப்பதால் அவர் நேற்றே இந்த எலிமினேஷன் வேலைகளை முடித்துவிட்டு கிளம்பிவிட்டதாக சில தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. அதில் இந்த வாரம் வைஷ்ணவி தான் வெளியேற்றபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement