என்னது, பிக் பாஸ் வீட்டில் செல் போனை பயன்படுத்தினாரா சோம் ? நேத்து இத நோட் பண்ணீங்களா ? சிக்கிய வீடியோ.

0
23136
som
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன்12 வாரங்களை கடந்து இருக்கிறது இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா ஆகிய என்று 8 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் இன்னும் ஒன்பது பேர் அப்படியே இருக்கிறார்கள். ஆனால், இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில வாரங்களில் தான் எஞ்சி இருக்கிறது. இதனால் தான் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் கூட டபுள் எவிக்ஷன் நடைபெற்றது. அதே போல இத்தனை வாரங்களை கடந்தாலும் பிக் பாஸ் வீட்டில் இதுவரை சுவாரசியமான டாஸ்ககும் கொடுக்கப்படவில்லை.

பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே போட்டியாளர்களுக்கும் வெளியுலக இருக்கும் எந்த ஒரு தொடர்பும் இருக்காது. உணவு உடை தங்கும் வசதி இந்த மூன்றைத் தவிர வெளியுலகில் அவர்கள் அனுபவித்த எந்த ஒரு சொகுசையும் அனுபவிக்க அனுமதி கிடையாது என்று தான் ரசிகர்கள் பலரும் நம்பி வருகிறார்கள். இப்படி ஒரு நிலையில் நேற்று(டிசமபர் 26) ஒளிபரப்பான நிகழ்ச்சியில் சோம் சேகர் செல்போனை பயன்படுத்தி இருந்தார் என்று ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. நேற்றைய நிகழ்ச்சியில் அனிதாதான் மிகவும் கமலால் வறுத்தெடுக்கப்ட்டு இருந்தார் அதிலும் அனிதா மற்றும் ஆரிக்கு இடையே நடந்த பிரச்சனை குறித்து நடிகர் கமலஹாசன் கேட்டுக் கொண்டிருந்தார்.

இதையும் பாருங்க : அருண் விஜய் மகன பாத்திருப்பீங்க , அவரது மகளை பார்த்துளீர்களா ? என்ன இப்படி வளந்துட்டாரு.

- Advertisement -

இந்த பிரச்சனையில் தன் பக்க வாதத்தை அனிதா பேசிக்கொண்டு இருக்கும்போது ஒரு நொடி கேமரா சோம் பக்கம் திரும்பியிருந்தது அப்போது சோம் சேகர் தலையை குனிந்தபடி தனது தொடைக்கு அருகில் ஏதோ நோண்டி கொண்டு இருந்தார் (இந்த நிகழ்வை நேற்றய நிகழ்ச்சியில் 41 நிமிடத்தில் பார்க்கலாம் ). இதைத்தான் நெட்டிசன்கள் பலரும் சோம் சேகர் செல்போனை நோண்டிக் கொண்டிருந்ததாக சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். ஆனால், உண்மையில் சோம் சேகர் செல்போனை பயன்படுத்தினாரா ? இல்லை தனது சட்டையில் இருந்த கரையை தன்னுடைய நகத்தால் சரி செய்து கொண்டார் இருந்தாரா என்பது தெரியவில்லை.

இது ஒருபுறம் இருக்க இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அடிப்படையில் ஆரி, ஆஜித், சிவானி, கேப்ரில்லா, அனிதா, சம்பத் ஆகியோர் நாமினேட் ஆகியிருந்தார்கள். எனவே, இந்த வாரம் யார் வெளியேற போகிறார்கள் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும், இந்த வாரம் அனிதா சம்பத் அல்லது ஆஜித் ஆகிய இருவரில் வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது அதற்கு ஏற்றார் போல அனிதா சம்பத் தான் வெளியேறிஇருக்கிறார் என்று நம்பகரமான தகவல் ஏற்கனவே வெளியாகிவிட்டது.

-விளம்பரம்-
Advertisement