போன சீஸனில் லாஸ்லியாவிற்கு தனது புகைப்படத்தை அனுப்பிய பிக் பாஸ் – இவர் தான் அது.

0
1856
BB
- Advertisement -

பிக் பாஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரரின் புகைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஒளிபரப்பானாலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரபாகி வரும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கான ப்ரோமோ வீடியோவில் கேட்கும் குரல் மக்களுக்கு மிகவும் பரிட்சியமான ஒரு குரலாக இருந்து வருகிறது. “பிக் பாஸ் தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்” என்ற Promo-வில் கம்பீரமான குரலுக்கு பின்னால் இருக்கும் அவரது முகத்தை இதுவரை பெரும்பாலானோர் கண்டதில்லை.

-விளம்பரம்-

அந்த பிரம்மாண்ட குரலுக்கு சொந்தக்காரரின் பெயர் கோபி நாயர் என்பது மட்டுமே நமக்கு தெரியும். கோயம்பத்தூரை சேர்ந்த இவர் 2000 ஆம் ஆண்டு வேலை தேடி சென்னை வந்துள்ளார். முதலில் இயக்குனராக வர வேண்டும் என்று வாய்ப்பு தேடி வந்த இவருக்கு, இவரது குரல் வளத்தை கண்டு டப்பிங் ஆர்டிஸ்டாக வாய்ப்பு கிடைத்துள்ளது.தொடர்ந்து டப்பிங் ஆர்டிஸ்டாக பணியாற்றி வந்த இவருக்கு விஜய் டிவியில் டப்பிங் பேச வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களுடன் பேசும் அந்த பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் யார் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.

இதையும் பாருங்க : பிரசவ தழும்புகள் எங்கே ? உடல் கேலிக்கு தனது பிரசவ தழும்புகளை காண்பித்து நகுல் மனைவி செருப்படி பதில்.

- Advertisement -

அது யார் என்பதை அறிந்து கொள்ள பலரும் ஆவலுடன் இருந்து வருகின்றனர். மேலும், அது மாநாட மயிலாட நிகழ்ச்சியில் பங்குபெற்ற கோகுலின் குரல் என்று கூறப்பட்டது. ஆனால், அவரும் இதை மறுத்து இருந்தார். அதே போல தொகுப்பாளரும் நடிகருமான ரிஷி தான் பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் என்று கூறப்பட்டது. ஆனால், அதைப்பற்றிய உறுதியான தகவல் வெளியாகவில்லை. ;அவ்வளவு ஏன் கடந்த சீசனில் லாஸ்லியாவிற்கு பிக் பாஸ் ஒரு புகைப்படம் ஒன்றை அனுப்பி வைத்திருந்தார்.அந்த புகைப்படத்தில் இருப்பது தான் பிக் பாஸ் என்றும் கூறப்பட்டது. ஆனால், அந்த புகைப்படத்தில் கூட பிக் பாஸ்ஸின் முகம் தெளிவாக தெரியவில்லை.

இருப்பினும் அந்த புகைப்படத்தில் பிக் பாஸ் ஒரு இளமையான நபராக தான் தெரிந்தார். இப்படி ஒரு நிலையில் தற்போது பிக் பாஸ் குரலுக்கு உண்மையான சொந்தக்காரர் பற்றிய அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அவருடைய பெயர் சச்சுதாநந்தம். இவருடைய பூர்வீகம் தமிழ்நாடாக இருந்தாலும் இவர் பாலிவுட் வரை வேலை செய்து இருக்கிறாராம். தற்போது இவரின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இவரை பற்றிய மேலும் சில தகவல்களை விரைவில் பதிவுடுகிறோம்.

-விளம்பரம்-
Advertisement