பிக் பாஸ் லோகோவை போல டாட்டூ குத்திக்கொண்டுள்ள தனுஷ் பட நடிகை – இதான் காரணமாம்.

0
616
- Advertisement -
நீங்கள் பிக் பாஸ் ரசிகராக இருந்தால் கண்டிப்பாக இந்த புகைப்படத்தை பார்த்ததும் உங்களுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் லோகோ தான் நினைவிற்கு வரும். த,த,தமிழில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் விரைவில் துவங்க இருக்கிறது. தமிழில் ஒளிபரப்பாவது போலவே பிக் பாஸ் நிகழ்ச்சி ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த அனைத்து மொழிகளிகளிலும் ஒரே லோகோவாக இருப்பது இந்த கண்கள் தான். 


இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் லோகோவாக வரும் கண்களை போன்று நடிகை அமைரா தஸ்தூர் தனது பின் கழுத்துக்கு கீழ் டாட்டூவாக குத்திக்கொண்டு இருக்கிறார். இந்தியில் கடந்த 2013 ஆம் ஆண்டு “இஷாக்” என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை அமிரா தஸ்துர். இதுவரை தமிழ் மற்றும் ஹிந்தியில் சேர்த்து 5 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இருப்பினும் ஹிந்தியில் ஒரு சில பட வாய்ப்புகளை கையில் வைத்துள்ளார் அமிரா தஸ்துர்.

தனது முதல் ஹிந்தி படத்திற்கு பின்னர் 2015 தனுஷ் நடிப்பில் வெளியான அனேகன் என்ற படுத்தி நடித்தார். ஆனால் அந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவில்லை. இதனால் தான் முதலில் அறிமுகமான ஹிந்தி மற்றும் தமிழ் படங்கள் இரண்டுமே ஓடவில்லை. தற்போது இந்த ஆண்டு 'ஓடி ஓடி உழைக்கணும் ' , 'காதலை தேடி நித்யா நந்தம் ' போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்த டாட்டூ குறித்து பேசிய அமைரா தஸ்தூர் ' எனக்கு எப்போதுமே ஈவில் கண் மீது மோகம் உண்டு. வடிவமைப்பும் அதன் பின்னணியில் உள்ள வரலாறும் எப்போதும் என்னை யோசிக்க வைத்து கொண்டே இருந்தது. இந்த பச்சை ஒரு வகையில் பாதுகாப்பின் அடையாளமாக இருக்க வேண்டும் என்பதோடு, அவர்கள் மீது என் கண் இருக்கிறது என்று மக்களுக்குச் சொல்லும் ஒரு வழி' என்று கூறியுள்ளார் நடிகை அமைரா தஸ்த்தூர். 

-விளம்பரம்-
Advertisement