அசீமை தொடர்ந்து பூவே உனக்காக சீரியலில் என்டரி கொடுத்துள்ள பிக் பாஸ் பிரபலம் – அதுவும் இவருக்கு பதிலா.

0
3525
poove

சமீபத்தில் பூவே உனக்காக தொடரில் புதிய நாயகனாக அஸீம் என்ட்ரி கொடுத்ததை தொடர்ந்து தற்போது பிக் பாஸ் நடிகரும் இந்த தொடரில் என்ட்ரி கொடுத்து இருக்கிறார். விஜய் டிவியை போல சன் தொலைக்காட்சியிலும் சினிமா டைட்டில்களை கொண்ட பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. வானத்தை போல. பூவே உனக்காக, ரோஜா என்று சினிமா டைட்டிலில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் பூவே உனக்காக சீரியல் சன் டிவியின் வெற்றிகரமான சீரியல்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட்ட இந்த சீரியல் வெற்றிகரமாக 250 எபிசோடுக்கு மேல் கடந்து இருக்கிறது. இந்த சீரியலில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் இந்த சீரியலின் நாயகனாக நடித்த அருண் இந்த சீரியலில் இருந்து விலகிவிட்டதாக அவரே தனது சமூக வலைதளத்தில் தெரிவித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் அவருக்கு பதிலாக விஜய் டிவியில் பல சிரியல்களில் நடித்த அஸீம் கமிட் ஆகி இருக்கிறார்.

- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம், பகல் நிலவு போன்ற தொடர்களில் நடித்தவர் அசீம். ஆனால், விஜய் தொலைகாட்சிக்கு வருவதர்க்கு முன்பாகவே இவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் vjவாக பணியாற்றினார். அதன் பின்னர் சன் டிவியில் விகடன் தயாரித்த ஹிட் சீரியலான ‘பிரியமானவள்’ தொடரில் நடித்தார். அதன் பின்னர் தான் விஜய் டிவிக்கு வந்தார்.

தற்போது மீண்டும் தனது தாய் வீடான சன் டிவிகே வந்துவிட்டார் அசீம். இப்படி ஒரு நிலையில் மலையாள பிக்பாஸ் ஷோவில் கலந்து கொண்டு பரவலான வரவேற்பை பெற்ற ஸ்ரீனிஷ் அரவிந்த் இந்த தொடரில் இணைந்துள்ளார். பூவே உனக்காக சீரியலில் அரவிந்த் கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்து அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஒரு நல்ல road a போட்டு நம்ம route a clear பண்ண வேண்டியது தான்.

-விளம்பரம்-
Advertisement