துவங்கியது இந்த வார ஓட்டிங்.! யார்? யாரை?நாமினேட் செய்தார்கள் தெரியுமா.!

0
1784
Saravanan
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான முதல் நாமினேஷன் ப்ராசஸ் நேற்று (ஜூலை 1) துவங்கியது. அனைவரும் எதிர்பார்த்த மற்றும் எதிர்பாராத பல போட்டியாளர்களின் பெயர்கள் இந்த வார நாமினேஷனில் இடம்பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக கன்பெஷன் ரூமிற்கு சென்று தாங்கள் யாரை நாமினேட் செய்யப்போகின்றனர் என்ற விவரத்தை சொன்னார்கள், அதில் யார் யார் யாரை நாமிநேட் செய்தார்கள் என்ற விவரம் பின் வருமாறு.

-விளம்பரம்-

- Advertisement -
  • மதுமிதா – கவின் மற்றும் பாத்திமா பாபு
  • அபிராமி – மதுமிதா மற்றும் மீரா
  • ஷெரின் – மதுமிதா மற்றும் மீரா
  • கவின் – மீரா மற்றும் மதுமிதா
  • மீரா – அபிராமி மற்றும் சாக்க்ஷி
  • பாத்திமா – கவின் மற்றும் சரவணன்
  • சாண்டி – மதுமிதா மற்றும் சேரன்
  • சாக்க்ஷி – மதுமிதா மற்றும் மீரா
  • வனிதா – மீரா மற்றும் சேரன்
  • தர்ஷன் – சாக்க்ஷி மற்றும் மீரா
  • லாஸ்லியா – மீரா மற்றும் சரவணன்
  • ரேஷ்மா – மதுமிதா மற்றும் பாத்திமா
  • சரவணன் – சேரன் மற்றும் பாத்திமா
  • சேரன் – தர்ஷன் மற்றும் லாஸ்லியா
  • முகன் – மீரா மற்றும் சேரன்
  • மோகன் வைத்யா – சேரன் மற்றும் பாத்திமா

நாமினேஷன் முடிவின்படி மீராவை 8 பேரும், மதுமிதாவை 6 பேரும், சேரனை 5 பேரும், பாத்திமாவை 4 பேரும், சாக்க்ஷி, கவின், சரவணன் ஆகியோரை 2 பேரும் நாமினேட் செய்தனர்.

இதில் ஹவுஸ்மேட்ஸ்களின் ஏவிக்ஷனிற்கு பின்னர் நாமினேட் ஆன நபர்களின் பெயர்கள் அறிவிக்கபட்டது. அதில் கவின், சாக்க்ஷி, சரவணன். பாத்திமா, சேரன், மீரா, மதுமிதா என்று 7 நபர்கள் இந்த வாராம் நாமினேட் ஆகியுள்ளனர். இதில் சரவணன் நாமினேட் ஆனது தான் போட்டியாளர்கள் அனைவரும் சற்று ஷாக்கானார்கள்.

-விளம்பரம்-

ஆனால், அவரை நாமினேட் செய்தது, பாத்திமா மற்றும் லாஸ்லியா மட்டும் தான். அதே போல இத்தனை சண்டைக்கு பின்னரும் அபிராமியை மதுமிதா நாமினேட் செய்யாதது தான் மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. அதே போல கவின், சரவணன், சாண்டி ஆகிய மூன்று பேரும் சேரனை நாமினேட் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே கூடி முடிவெடுத்தனர்.

இதில் சேரனுக்கு சைக்கிள் என்று பட்டப்பெயரையும் வைத்துள்ளார் சாண்டி. கவினிடம் சைக்கிளை நாமினேட் செய்து விட வேண்டும் என்று கடைசி நேரத்தில் கூட சாண்டி சொன்னார். அதற்கு தலையாட்டிவிட்டு கவினோ, மீரா மற்றும் மதுமிதாவை நாமினேட் செய்து விட்டார்.

Advertisement