இந்த சீஸனின் முதல் Open Nomination. இந்த வாரமும் நாமினேட்டான 11 பேர். யார் யார் தெரியுமா ?

0
287
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் நான்காம் வாரத்திற்கான நாமினேஷன் பட்டியல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி மூன்று வாரங்களை கடந்து இருக்கிறது. மற்ற சீசன்களை போல இந்த சீனிலும் மற்ற பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்த சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

-விளம்பரம்-

இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு விஜய், ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். முதல் நாள் காலையிலேயே பிக் பாஸ் வீட்டுக்குள் கன்டன்ட்டை தொடங்கி விட்டார்கள். மேலும், இந்த சீசனில் வித்தியாசமாக இரண்டு வீடுகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி உள்ளது.

- Advertisement -

பிக் பாஸ் 7 நிகழ்ச்சி:

இந்த முறை சின்ன பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் தான் சமையல், கிளீனிங் எல்லாம் செய்யணும் என்று அறிவித்திருந்தார்கள். இந்த சின்ன பிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் நபரை கேப்டன் தான் தேர்ந்து எடுப்பார். சொல்லப்போனால், இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை கொண்டு சென்றிருக்கிறார்கள். முதல் வாரமே நிகழ்ச்சி விறுவிறுப்பாகவும் கலவரமாகவும் சென்றிருந்தது. முதல் வாரம் எவிக்சன் நடக்காது என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், முதல் வாரத்திலேயே அனன்யா வெளியேறி இருந்தார்.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

பின் பவா, தன்னால் இனி நிகழ்ச்சியில் விளையாட முடியாது என்று தாமாகவே வெளியேறிவிட்டார். தற்போது 16 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த வாரத்திற்கான நாமினேஷனில் நிக்சன்,அக்ஷயா,மணி சித்ரா, ஐசு,விஜய், மாயா, பூர்ணிமா, வினுஷா,விக்ரம் மற்றும் பிரதீப் ஆகிய 11 பேர் நாமினேட் ஆகி இருந்தனர். இதில் மாயா அல்லது பூர்ணிமா ஆகிய இருவரில் யாராவது வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது விஜய் வர்மா இந்த வாரம் வெளியேறி இருக்கிறார்.

-விளம்பரம்-

நான்காம் வாரம்:

இன்று நான்காம் வாரம் தொடங்கி இருக்கிறது. இந்த வாரம் பூர்ணிமா ரவி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் பட்டியல் வெளியாகியிருக்கிறது. இந்த முறை ஓபன் நாமினேஷன் என்று பிக் பாஸ் அறிவித்திருக்கிறார். அதன்படி கூல் சுரேஷ், வினுஷா, மாயா, சரவண விக்ரம், விஷ்ணு, பிரதீப் ஆண்டனி, யுகேந்திரன், அக்ஷயா, நிக்ஸன், ஜோவிகா, மணி ஆகியோர் நாமினேட் ஆகிருக்கிறார்கள்.

வைல்ட் கார்டு எண்ட்ரி:

குறிப்பாக, யுகேந்திரன் அவர்கள் வினுஷா- மாயா நாமினேட் செய்து இருக்கிறார். அதில் வினுஷா யாரிடமும் அட்ஜஸ்ட் ஆக மாட்டுகிறார். மாயா அவருடைய விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறார் என்று சொல்லியிருக்கிறார். தற்போது இந்த பட்டியல் வெளியாகியிருக்கிறது. இதில் இந்த வாரத்தில் இருந்து யார் வெளியேறப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். அதுமட்டுமில்லாமல் இந்த வாரம் இறுதியில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக ஐந்து பேர் பிக் பாஸ் வீட்டிற்கு வருவதாக கமலஹாசன் கூறியிருக்கிறார்.

Advertisement