வீட்டுக்குள் நுழைந்ததும் ஆரி மகளுக்கு டாஸ்க் கொடுத்த பிக் பாஸ் – செம குயூட் வீடியோ.

0
2641
aari
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 12 வாரங்களை கடந்து இருக்கிறது இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா ஆகிய என்று 8 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் அனிதா சம்பத் வெளியேறி இருந்தார். , இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில வாரங்களில் தான் எஞ்சி இருக்கிறது. இதனால் தான் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் கூட டபுள் எவிக்ஷன் நடைபெற்றது. அதே போல இத்தனை வாரங்களை கடந்தாலும் பிக் பாஸ் வீட்டில் இதுவரை சுவாரசியமான டாஸ்ககும் கொடுக்கப்படவில்லை.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் கடந்த திங்கள் கிழமை வாரத்தின் முதல் நாள் என்பதால் இந்த வாராதிக்கான நாமினேஷன் நடைபெற்று இருந்தது . இந்த வாரம் ஆரி தலைவர் ஆகி இருத்தால் அவரை இந்த வார நாமினேஷனில் இல்லை. இந்த வாரம் ஆஜீத், சோம், கேப்ரில்லா, ஷிவானி, ரம்யா ஆகியோர் நாமினேட் ஆகி இருக்கிறாரகள். இந்த வாரம் ஷிவானி அல்லது ஆஜீத் வெளியேற அதிக வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஆனால், இந்த வாரம் பல்வேறு வலைத்தளங்களில் நடைபெற்று வரும் வாக்கெடுப்பில் ரம்யா பாண்டியனுக்கு தான் மிகவும் குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளது. மேலும், அவருக்கு அடுத்தபடியாக ஆஜித்திற்கு தான் குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளது. இப்படி ஒரு நிலையில் கடந்த இரண்டு தினங்களாக ப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் பாலா, ஷிவானி, ரம்யா, சோம், ரியோ என்று அவரவர் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து சென்றுவிட்டனர்.

இன்று வெளியான ப்ரோமோவில் கேப்ரில்லா மற்றும் ஆஜீத் குடும்பத்தினர் வந்திருந்தனர். இதற்கெல்லாம் மேலாக ஆரியை சந்திக்க அவரது குடும்பத்தில் இருந்து யார் வருவார்கள் என்று மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் தற்போது ஆரியை சந்திக்க அவரது மனைவியும் மகளும் உள்ளே சென்று ஆரிக்கு இன்ப கொடுத்திருக்கிறார்கள். மேலும், ஆரி மகளுக்கு டாஸ்க் ஒன்றை கொடுத்த பிக் பாஸ் கண்பெஷன் ரூமிற்கு சென்று அவரது அம்மாவை அழைத்து வர சொல்லியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement