விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆரி, ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா, சோம் சேகர் என்று 18 பேர் இந்த சீசனில் கலந்து கொண்டனர். இந்த சீசன் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்திருந்தனர். முதல் இடத்தை பிடித்த ஆரிக்கு 50,00,000 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.
இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் அதில் கேப்ரில்லாவும் ஒருவர். இவர் பிரபலமானது என்னவோ விஜய் தொலைக்காட்சி மூலம் தான்.விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது அந்த வகையில் நடனத்தில் ஆர்வம் உள்ள நபர்களுக்காக தொடங்கப்பட்டதுதான் ஜோடி என்ற நடன நிகழ்ச்சி.இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் தான் கேப்ரில்லா.
இதையும் பாருங்க : IPL 2021 : ஹார்லிக்ஸு பூஸ்டு CSK வேஸ்ட்டு – இந்த ஆண்டும் CSKவை கேலி செய்து வீடியோ வெளியிட்ட RCB ரசிகைகள்.
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2012 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஏழாம் வகுப்பு c’ பிரிவு அதாவது ‘7 சி’ என்ற சீரியலில் கேபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். மேலும், தனுஷ் நடித்த ‘3’ படத்தில் ஸ்ருதி ஹாசன் தங்கையாக நடித்திருந்தார்.ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவரை பார்த்த போது பலரும் ‘3’ படத்தில் வந்த குட்டிப்பொண்ணா இது என்று வியப்படைந்தார்கள். பிக் பாஸ் வீட்டில் நடிகை கேப்ரில்லா அணிந்து வரும் ஆடைகள் கூட கவனத்தை ஈர்த்தது.
இப்படி ஒரு நிலையில் பிக் பாஸில் ரம்யா அணிந்த ஆடையை ஒரு கிழிந்த ஜீன்ஸ்சுடன் அணிந்து இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த பலர் இது ரம்யாகிட்ட இருந்து சுட்ட ட்ரெஸ் தானா என்று கேலி செய்தனர். அதே போல பலரும் இவரது கிழிந்த ஜீன்ஸ்ஸை கேலி செய்து பல கமெண்டுகளை பதிவிட்டு கலாய்த்து தள்ளினர்.
இதனால் மீண்டும் இதே கிழிந்த ஜீன்ஸ்ஸை வேறு ஒரு ஆடையுடன் அணைந்து புகைப்படம் ஒன்றை பதிவிட்ட கேப்ரில்லா, ஆமா, கிழிஞ்ச பேன்ட் தான் காஸ் இருந்தா வாங்கி கொடுங்கப்பா என்று பதில் அளித்துள்ளார். இந்த பதிவை கண்ட ரியோ, ரொம்ப கிழிஞ்சி இருக்கேமா என்று அவர் பங்கிற்கு கலாய்த்