பிக்பாஸ் வீட்டுக்குள் போகும் பிரபல நடிகர்.! வைல்ட்கார்ட் மூலம் போகிறாரா.? வெளியான தகவல்.!

0
831
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் எந்த அளவிற்கு பிரபலம் என்பது நமக்கு தெரியும். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமல் தான் இந்த நிகழ்ச்சியை அரசியல் ஆதாயத்திற்காகவும் பயன்படுத்திக் கொள்கிறேன் என்று பல முறை சுசகமாக தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Sendrayan-bigg-boss
Sendrayan-bigg-boss

பிக் நிகழ்ச்சியை பயன்படுத்தி சில பட குழுவினரும் தங்களது படங்களை ப்ரோமோஷன் செய்வதற்காக பிக் பாஸ் வீட்டில் சிறப்பு விருந்தினராக சென்றுள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் நடிகர் கார்திக்கின் ‘கடைக்குட்டி ‘ சிங்கம் படக்குழுவினரும் அதனையடுத்து ‘விஸ்வரூபம் ‘ படக்குழுவினரும் சிறப்பு விருந்தினராக சென்றிருந்தனர்.

- Advertisement -

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் நடிகர் ஆர்யா செல்ல இருப்பதாக சில தகவல்கள் வெளியகியுள்ளது. நடிகர் ஆர்யா தற்போது சந்தோஷ் பி. ஜெயக்குமாரின் இயக்கத்தில், கே. ஈ. ஞானவேல்ராஜாவின் தயாரிப்பில் உருவாகி வரும் ‘கஜினிகாந்த்’ படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் ப்ரோமோஷனிற்காக ஆர்யா செல்ல இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

arya

-விளம்பரம்-

மேலும், சில நாட்களுக்கு முன்னர் ஆர்யா அளித்த பேட்டி ஒன்றில் அவர் தெரிவிக்கையில் ‘நான் நடித்து வரும் ‘கஜினிகாந்த் ‘ படத்தின் ப்ரோமோஷனிற்காக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றாலும் செல்லலாம் ‘ என்று தெரிவித்திருந்தார். ஆனால், நடிகர் ஆர்யா மற்றும் செல்லவிருக்கிறாரா இல்லை படக்குழுவும் அவருடன் செல்கின்றா என்பது தெரியவில்லை.

Advertisement