100 நாள் லாக்டவுனுக்கு பின் இப்படி தான் இருக்கும். கணேஷ் வெங்கட் பகிர்ந்த வீடியோ.

0
2368
ganesh
- Advertisement -

தமிழ் திரையுலகில் 2008-ஆம் ஆண்டு வெளி வந்த படம் ‘அபியும் நானும்’. இந்த படத்தினை பிரபல இயக்குநர் ராதா மோகன் இயக்கியிருந்தார். இதில் கதையின் மிக முக்கிய கதாபாத்திரங்களில் த்ரிஷா, பிரகாஷ் ராஜ், கணேஷ் வெங்கட்ராம், ஐஸ்வர்யா, இளங்கோ குமாரவேல் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் நடிகர் கணேஷ் வெங்கட்ராம் த்ரிஷாவின் லவ்வராக வலம் வந்திருந்தார். இது தான் தமிழ் சினிமாவில் நடிகராக கணேஷ் வெங்கட்ராம் அறிமுகமான முதல் திரைப்படமாம்.

-விளம்பரம்-

இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ‘உலக நாயகன்’ கமல் ஹாசனின் ‘உன்னைப்போல் ஒருவன்’ என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்தார் கணேஷ் வெங்கட்ராம். அந்த படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. ‘உன்னைப்போல் ஒருவன்’ படத்துக்கு பிறகு ‘பனிதுளி, தீயா வேலை செய்யணும் குமாரு, சந்திரா, இவன் வேற மாதிரி, அச்சாரம், தனி ஒருவன், பள்ளிக்கூடம் போகாமலே, நாயகி, தொடரி, இணையதளம், 7 நாட்கள்’ என அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார் கணேஷ் வெங்கட்ராம்.

- Advertisement -

இதில் சில படங்களில் அவர் கதையின் நாயகனாகவும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 2015-ஆம் ஆண்டு நடிகர் கணேஷ் வெங்கட்ராம் பிரபல நடிகை நிஷா கிருஷ்ணனை திருமணம் செய்து கொண்டார். 2017-ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ என்ற ரியாலிட்டி ஷோவில் நடிகர் கணேஷ் வெங்கட்ராமும் ஒரு போட்டியாளராக இருந்தார்.

தற்போது, ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருவதால், ‘144’ போடப்பட்டுள்ளது. திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் கணேஷ் வெங்கட்ராம் இது குறித்து சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார். இந்த லாக் டவுனில் கணேஷ் வெங்கட்ராம் தனது மனைவியை பிரிந்து வேறு ஒரு ஊரில் வசித்து வருகிறாராம்.

-விளம்பரம்-

100 நாட்கள் லாக் டவுன் முடிந்த பிறகு என் லவ்வரை நேரில் சந்திக்கும் போது இப்படி தான் இருக்கும் என்று கூறி ‘பிக் பாஸ்’ கொண்டாட்டத்தின் போது கணேஷ் வெங்கட்ராமும், அவரது மனைவி நிஷா கிருஷ்ணனும் ‘யாயும்’ பாடலுக்கு நடனமாடிய வீடியோவை வெளியிட்டிருக்கிறார். ‘யாயும்’ என்ற பாடல் ‘சகா’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement