4ஆண்டு கழித்து பிறந்த தனது மகளின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய கணேஷ் – நிஷா தம்பதியினர்.

0
3770
ganesh
- Advertisement -

வெள்ளித்திரையை போன்றே சின்னத்திரையில் உள்ள பல்வேறு நட்சத்திரங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். அந்த வகையில் பிரபல சின்னத்திரை ஜோடியான கணேஷ் மற்றும் நிஷா தம்பதியரை அனைவருக்கும் தெரியும். விஜய் டிவியில் ‘நெஞ்சம் மரப்பதில்லை’ என்ற சீரியலில் நடித்து இல்லாதரிசிகளிடயே பிரபலமானவர் நடிகை நிஷா. மேலும், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற கணேஷ் வெங்கட் ரமனின் மனைவி என்பது குறிப்பித்தக்கது.

-விளம்பரம்-

நடிகரான கணேஷ் வெங்கட் ராமன் தமிழில் 2009 ஆம் ஆண்டு வெளியான ‘அபியும் நானும்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் உன்னைப்போல் ஒருவன், தனி ஒருவன், தொடரி போன்ற பல படங்களில் நடித்துளளார். மேலும், இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தியது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். தொலைக்காட்சி தொகுப்பாளியான இருந்த நிஷா சீரியல்களிலும் நடித்து பிரபலமாணவர்.

இதையும் பாருங்க : தனது மகளின் 5வது பிறந்தநாளை கொண்டாடிய அருண் விஜய் சகோதரி (இப்பவும் ஹீரோயினா நடிக்கலாம் போல )

- Advertisement -

கனா காணும் காலங்கள், தெய்வமகள், ஆபிஸ், சரவணன் மீனாட்சி, மஹாபாரதம் போன்ற பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார். அதிலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ தொடரில் நடித்து பிரபலத்தின் உச்சிகே சென்றார். சீரியல்களில் தொடர்ந்து நடித்து வந்த நிஷா கற்பமானதால் அந்த சீரியலில் இருந்து விலகினார்.

கணேஷ் மற்றும் நிஷா தம்பதியினருக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகள் கழித்து கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. மேலும், தங்களது மகளுக்கு சமைரா என்று பெயர் வைத்துள்ளனர். இப்படி ஒரு நிலையில் கணேஷ் மற்றும் நிஷாவின் மகள் சமைராவின் இரண்டாவது பிறந்தநாளை மிகவும் கோலாகலமாக கொண்டாடியுள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement