என்ன பிக்பாஸ் பேட்டிக்கு கூப்பிடாதிங்க.! இது ஒன்னும் “Oscar Awards” இல்ல.! பிக்பாசை கிழித்த சீசன் 1 போட்டியாளர்.!

0
238
Bigg-Boss

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜூலிக்கு பின்னர் ரசிகர்களால் அதிகம் வெறுக்கப்பட்டவர் நடன இயக்குனரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் தான். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் செய்த சில செயல்களால் ரசிகர்கள் மத்தியில் அதிகப்படியான வெறுப்பை சமபதித்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னரும் அவரை நெட்டிசன்கள் கலாய்பதை நிறுத்தாமல் இருந்து வந்தனர். இதனால் இவர் என்ன பதிவை போட்டாலாம் அதனை கலாய்த்து தள்ளி வந்தனர் இவரது ஹேட்டர்ஸ்கள். இந்நிலையில் சமீபத்தில் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மஹத்திற்கு ஆதரவாக ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டிருந்தார்.

இதனை கண்ட ட்விட்டர் வாசிகள் வழக்கம் போல காயத்ரி ரகுராமை கலாய்த்து வந்தனர். பிக் பாஸ் சீசன் 1ல் நீங்கள் நடந்தலட்சணம் எங்களுக்கு தெரியும், அதனால் நீங்கலெல்லாம் அட்வைஸ் செய்யாதீர்கள் என்று கலாய்த்து வந்தனர். ட்விட்டர் வாசிகளின் கேள்விகளுக்கு தொடர்ந்து பதிலளித்து வந்த காயத்ரி மிகவும் கடுப்பாகினர்.

ஒரு கட்டத்தில் மிகவும் கடுப்படைந்த காயத்ரி ”என்னை யாரும் பிக் பாஸ் பேட்டிக்கு அழைக்காதீர்கள். அது வெறும் ஒரு கேம் ஷோ தான் ஆஸ்கார் விருது ஒன்றும் இல்லை. அணைத்து ஊடகங்களும் இதனை ஒரு செய்தியாக மாற்றி விடாதீர்கள். இது செய்தி கிடையாது” என்று பதிவிட்டிருந்தார். ஆனால், இதனையும் ட்விட்டர் வாசிகள் கலாய்க்க ஆரம்பிக்க, அதன் பின்னர் எந்த பதிவியையும் பதிவிடாமல் இருக்கிறார் காயத்ரி