அந்த தொகுதில போட்டியிட்டு 20,000 ஓட்டு வாங்க பெற முடியுமா?அப்படி வாங்குனா – அண்ணாமலைக்கு காயத்ரி சவால்.

0
359
gayathri
- Advertisement -

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் காயதிரி ரகுராம் தற்போது மீண்டும் அண்ணாமலையை குற்றம் சாட்டி ட்விட்டர் பதிவு ஒன்றை குற்றம் கட்சியில் கடந்த 8 வருடங்களாக பணியாற்றி வந்தவர் காயத்ரி ரகுராம். இவர் தமிழ் நாடு மற்றும் அயல்நாட்டு தமிழ் வளர்ச்சி துறையில் தலைவராக இருந்து இவர் பாஜக கட்சியில் சேர்ந்ததில் இருந்து பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி வருகிறார்.

-விளம்பரம்-

சூர்யா – டெய்சி முதல் நேர்காணல் வரை :

சூர்யா – டெய்சி அடியோவினாலும் அலிஷா விவரகத்தினாலும் தற்க்கலிகமாக நீக்கப்பட்ட காயதிரி ரகுராம் கடந்த சில நாட்களுக்கும் முன்னர் முழுமையாக கட்சியில் இருந்து வெளியேறினார். இவர் வெளியேறியதில் இருந்து பல்வேறு செய்தி ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். மேலும் தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை பெண்களிடத்தில் தோற்று விட்டார். அண்ணாமலையுடன் நேர்காணலில் பேச வேண்டும். அவருக்கு என்னிடம் பேச தைரியம் இருக்கிறதா? என்று பதிவிட்டிருந்தார் காயதிரி ரகுராம்.

- Advertisement -

அண்ணாமலைக்கு நேரடி சவால் :

அதன் பிறகு சமீபத்தில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலையுடன் போட்டியிட சவால் விடுகிறேன். உங்களின் போலி நாடகங்கள் விளம்பரங்கள் டெல்லியில் வெளிவரட்டும். ஒருவேளை இந்த தேர்தலில் நான் தோற்றால் 5 நிமிடத்தில் நீங்கள் முதல்வராகி தேர்தலை மாற்றலாம். நான் தமிழ் நாட்டின் மகள், நீ தமிழகத்தின் மகன். தமிழகமா? தமிழ்நாடா? என்று பார்த்து விடலாம் என்று பதிவிட்டிருந்தது சோசியல் மீடியாவில் வைரலாக நிலையில் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையான ட்விட்டர் பதிவை போட்டுள்ளார் காயத்ரி ரகுராம்.

காயத்ரி குறித்து அண்ணாமலை கூறியது :

சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தமிழ் நாட்டு பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி கொடுத்திருந்தார். அந்த பேட்டியில் காயத்ரி ரகுராம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அண்ணாமலை கட்சிக்கு வெளியில் இருந்து குறை சொல்பவர்கள் சொல்லுக்கொண்டேதான் இருப்பார்கள் அதற்கு பதில் சொல்ல தேவையில்லை என தெரிவித்திருந்தார். இந்த மீண்டும் வழக்கம் போல அந்த பதிவை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து காயத்ரி ரகுராம் ஒரு ட்விட் பதிவை போட்டுள்ளார்.

-விளம்பரம்-

காயத்ரியின் ட்விட்டர் பதிவு :

அந்த பதிவில் `அன்புள்ள கர்நாடக வளர்ப்பு மகனே, பத்திரிக்கையாளர்கள் என் பெயரை சொன்னால் மட்டும் நீங்கள் ஏன் கோபப்படுகிறீர்கள் அல்லது பயப்படுகிறீர்கள்? ஏன் மனப் பதற்றம் படபடப்பு? ஏன் கண்ணா சிரித்த முகத்துடன் எனக்கு வாழ்த்த வேண்டாமா? எனக்கு தெரியும் உன் வண்டவாளம் தண்டவாளம் அதனால் நீ பயப்படுகிறாய். என்று பதிவிட்டிருந்தார். இதற்கு திருச்சி சூர்யா பதிலடி கொடுக்கும் வகையில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

திருச்சி சூர்யாவின் பதிலடி :

அந்த பதிவில் `பைத்தியம் என்றால் அவருக்கு மட்டுமல்ல எல்லாத்துக்கும் கொஞ்சம் பயமா தான் இருக்கும். சிரிச்சுகிட்டே வேற வாழ்த்தணுமாம் உன் மூஞ்சிக்கு இதுவே ஜாஸ்தி. அண்ணா உனக்கு தப்பா வாழ்த்து சொல்லிட்டாரு இப்பயாச்சும் நல்ல மனநல மருத்துவரை பார்த்து நல்லா இருக்கட்டும்னு சொல்லி இருக்கணும். என்று பதிலடி கொடுத்துள்ளார். சூர்யா பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அவர் முழுவதுமாக விளக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து விமர்சிக்கும் காயத்ரி ரகுராம் :

அதே போல சூர்யா டெய்சி விவகாரத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று மொத்தமாக பாஜகவில் இருந்து விளக்கினார். பாஜகவில் இருந்து இருந்தாலும் தொடர்ந்து தமிழ் நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை தொடர்ந்து விமர்சித்து வருகிறார் காயத்ரி ரகுராம். 5மில்லியன் 10 மில்லியன் சப்ஸ்க்ரைபர் இருந்தா தான் பேட்டி கொடுப்பேன் என்று சொல்லும் கர்நாடக வளர்ப்பு மகன் ஈரோட்டில் போட்டியிட்டு 20,000 ஓட்டு வாங்க பெற முடியுமா? டெபாசிட் வாங்கினா நான் அரசியல் பேசுவதை நிறுத்திவிடுகிறேன். என்ன கர்நாடக வளர்ப்பு மகன் தயாரா? என்று தொடர்ந்து அண்ணாமலை மீது விமர்சங்களை கூறி காயத்ரி ரகுராம் வருகிறார்.

Advertisement