விஜய் சேதுபதியின் நேற்றைய பேச்சை விமர்சித்த காயத்ரி. பதிலடி கொடுத்த சன் டிவி.

0
136764
Vijaysethupathi
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக கலக்கி கொண்டு இருப்பவர் தளபதி விஜய். கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த “பிகில்” படம் வசூல் சாதனை செய்தது. பிகில் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தற்போது நடித்து உள்ள படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து உள்ளார். இவர்களுடன் இந்த படத்தில் மாளவிகா மோகன், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து உள்ளனர்.

-விளம்பரம்-

தளபதி விஜயின் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (மார்ச் 15 ) ஹோட்டல் லீலா அரண்மனையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவை சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்பு செய்தார்கள். இந்த விழாவில் ரசிகர்களுக்கு யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இந்த விழாவில் இப்படத்தை சேர்ந்த பலரும் கலந்து கொண்டார்கள். பின் ஒருவர் பின் ஒருவர் மாஸ்டர் படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார்கள்.

- Advertisement -

இந்த விழாவில் பேசிய விஜய் சேதுபதி, மனிதனைக் காப்பாற்ற மனிதன்தான் வருவான், மேலே இருந்து யாரும் வரமாட்டார்கள். கொரோனா வைரஸ்ஸைப் பார்த்து பயப்படாதீங்க. கொரோனா வந்துடும்னு சொந்தக்காரங்களே தொட்டு பேச மறுக்குற நிலைமைல, பரவும்னு தெரிஞ்சும், கொரோனா வைரஸுக்கு மருத்துவம் பாக்குற அத்தனை பேரையும் நான் வணங்குறேன். இங்க மதத்தின் பேர்ல சுத்திகிட்டு இருக்கு. அந்த வைரஸால யாரும் பாதிக்கப்பட்டுடக் கூடாது. நல்லா சொல்றேன் கேட்டுக்கிங்க. மேல இருந்து எதுவும் வந்து நம்மளைக் காப்பாத்தாது. மனுஷனை மனுஷன் தான் காப்பாத்தனும். மதமோ – சாதியோ மனுஷன காப்பாத்தாது.

கடவுளை காப்பாத்துறேன்னு சொல்லிட்டு இருக்குற கும்பல்களிடம் இருந்து தள்ளியே இருங்க. ஒருத்தன் ஏதாவது மதத்த பத்தி பேசுனா, அதுக்கு தன்னோட மதத்துல இருக்கிறதுல இருந்து பேசாம, மனிதத்தையும்; மனிதநேயத்தையும் பேசுங்க. மனிதம் ஒன்றே மனிதனை காப்பாற்றும் என்றார். விஜய் சேதுபதியின் இந்த கருத்தை பிரபல பிபி பாஸ் நடிகை காயத்ரி விமர்சித்துள்ளார்.

-விளம்பரம்-

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,“மற்ற மனிதர்கள் மீதான உங்களின் நம்பிக்கைக்கு எனது வாழ்த்துகள் நண்பா. எந்த நம்பிக்கையையும் அழிக்க முடியாது. எல்லா மதத்திலும் கோடிக்கணக்கான நம்பிக்கைவாதிகள் உள்ளனர். நாங்கள் அனைவரும் முட்டாள்கள் என நீங்கள் நினைத்தால், பொய்களையும் வெறுப்பையுமே பரப்பும் மற்ற நபர்களை நம்பும் உங்களுக்காக நான் வருந்துகிறேன். வாழ்க்கையே கடவுளால் வடிவமைக்கப்பட்டதுதான். 

இன்றைய உலகில் சக மனிதர் உங்களுக்கு உதவி செய்து, உங்களை உயர்த்தி அதனால் அவரும் மகிழ்வார் என நினைப்பது ஒரு பெரிய ஜோக். அப்படி ஒருவர் உயர்த்திவிட்டால், அதற்கு அவருடைய தெய்வீக தன்மையும், தெய்வ பற்றுமே காரணமாஅக இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார். ஆனால், சிறிது நேரத்தில் அந்த ட்வீட்டை நீக்கி விட்டார் காயத்ரி. அதை ஏன் என்று பார்த்தால் காயத்ரி ரீ-ட்வீட் செய்த அந்த வீடியோ சன் டிவிக்கு சொந்தமானது என்று காபி ரைட் கொடுத்துள்ளனர். இதனால் அதிர்ந்து போன காயத்ரி, ரீ ட்வீட் செய்வது எப்படி காப்பி ரைட் ஆகும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement