கமல் மற்றும் வேட்பாளர்களை விமர்சித்து காயத்ரி போட்ட ட்வீட்.! வறுத்தெடுத்த ரசிகர்கள்.!

0
801
Bigg-Boss-gayathri

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் பல்வேறு கட்சிகளும் தங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியலை மும்மரமாக தயாரித்து வருகின்றது. அந்த வகையில் நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியில் தலைவருமான கமலஹாசன் கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்க இருக்கும் தனது கட்சியின் வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்திருந்தார்.

மேலும், நாடாளுமன்றத் தேர்தல் நேரம் இருக்கும் வேலையில் ஏன் கமலஹாசன் வேட்பாளர் பட்டியலை இன்னும் முழுமையாக அறிவிப்பு இல்லை என்று கேள்வி முன்வைக்கப்பட்டபோது, அதற்கு பதில் அளித்த கமல்ஹாசன் கட்சியின் கொள்கைக்கு உட்பட்டு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும், அவர்களுக்கு முறையான நேர்காணல் நடத்தப்பட்டு பின்னர் அவர்களை, தானே அறிமுகம் செய்யப் போவதாகவும் அறிவித்து இருந்தார்.

இதையும் படியுங்க : பிக் பாஸ் காயத்ரிக்கு இரண்டாவது திருமணம்.! அவருக்கு இது தான் ஆசையாம்.! 

- Advertisement -

மீதமுள்ள வேட்பாளர்களின் பட்டியலை வரும் மார்ச் 24ஆம் தேதி அறிவிப்பேன் என்று கமல் கூறியிருந்தார் இந்த சமயத்தில் பிரபல நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான காயத்ரி, கமலஹாசனை விமர்சித்து ட்விட்டரில் ஒரு குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். அதில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் கமல் ஏன் இன்னும் அவரது வேட்பாளர்களின் ஒருவரது முகத்தை கூட காண்பிக்க வில்லை. எல்லா புகழையும் தன்னையே சேர வேண்டும் என்று கருதுகிறாரா கமல். மேலும், கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும் படித்திருந்தால் அவர்கள் நல்லவர் என்று ஆகிவிடாது என்று குற்றம் சாட்டி இருந்தார்.

-விளம்பரம்-

காயத்ரி ரகுராம் செய்த இந்த ட்வீட் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவ, பிக்பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்ததே அவர் தான் என்றும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுடைய முகத்திரை எப்படி உலகறிய செய்தாரோ, அதே போல படித்தவர்களின் குணமும் இனி வெளிவரும்’ என்றும் காயத்ரி ரகுராமை வறுத்தெடுத்து வருகின்றனர்.

Advertisement