பிக் பாஸ் காயத்ரிக்கு இரண்டாவது திருமணம்.! அவருக்கு இது தான் ஆசையாம்.!

0
802
gaythri

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஜூலிக்கு பிறகு அதிகம் வெறுக்கப்பட்டவர் காயத்ரி ரகுராம் தான். சீசன் 1 நிகழ்ச்சியில் இவர், ஓவியவிடம் அடிக்கடி வம்பிழுந்து வந்ததால் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தது சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர். 

கடந்த சில காலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது டிவிட்டர் பக்கத்தில் கர்ப்பமாக இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்திருந்தார். இது குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.

இதையும் படியுங்க : இரவு பார்ட்டி..!குடி போதையில் காரை ஒட்டி வந்து காவலர்களிடம் ரகளை செய்த காயத்ரி..! 

இதற்கு முக்கிய காரணமே 2006 ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்ட காயத்ரி  கடந்த 2009 ஆம் ஆண்டே அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று விட்டார். இதனால் அவர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் வைரலானது. ஆனால், இறுதியில் அவர் கர்ப்பமாக இல்லை என்பதும், விளம்பர படத்திற்காக அந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்பதும் தெரியவந்தது.

இந்நிலையில் காயத்ரிக்கு இரண்டாவது திருமணம் செய்யும் எண்ணம் வந்துள்ளது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற காயத்ரி இதுகுறித்து பேசுகையில், இரண்டாவது திருமணத்திற்கு யாரும் தடுக்கவில்லை, அதுதான் முக்கியம் என்றும் நான் தேடவில்லை. ஆனால், நடந்தால் சந்தோஷம் என்ற மனநிலை இருக்கிறது. எனக்கு குழந்தை இருக்க வேண்டும் என்று ஆசை, அதற்காகவாவது திருமணம் நடக்கணும் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.