பீஸ்ட் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முஸ்லீம் லீக் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் இதுகுறித்து நடிகை காயத்ரி ரகுராம் கருத்து தெரிவித்து இருக்கிறார். தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது தளபதி விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள்.
இந்த படத்தின் ட்ரைலர் கூட சமீபத்தில் தான் வெளியாகி இருக்கிறது. ட்ரெய்லரில் ஒரு மால்லை பயங்கரமான தீவிரவாதிகள் ஹைஜாக் பண்ணுகிறார்கள். இந்த கடத்தலில் விஜய் எப்படி மக்களைக் காப்பாற்றினார்? என்பது தான் படத்தின் சுவாரஸ்யமே என்று கூறப்படுகிறது. மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. ஆனால், இந்த படத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மற்றும் வன்முறை சம்பந்தப்பட்ட காட்சிகள் அதிகமாக இருப்பதாக கூறி குவைத் அரசாங்கம் படத்திற்கு தடை விதித்துள்ளது.
பீஸ்ட் படத்திற்கு எதிராக முஸ்லீம் லீக் :
இந்த நிலையில் இந்த படத்தை வெளியிட கூடாது என்று தமிழ்நாடு முஸ்லீம் லீக் சார்பில் எதிர்ப்புகள் எழுந்துள்ளது. தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் தமிழக உள்துறை செயலாளர் எஸ் கே பிரபாகரனுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களை தீவிரவாதியாக சித்தரித்து பீஸ்ட் படத்தின் கதை உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. தற்போது இஸ்லாமியர்கள் புனித ரமலான் மாதத்தில் நோன்பு கடைபிடித்து வருகின்றனர். இந்த சூழலில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து பீஸ்ட் திரைப்படம் வரும் 13ம் தேதி வெளிவந்தால் இஸ்லாமியர்களிடையே ஒரு மனக்கசப்பு சூழல் ஏற்படும்.
காயத்ரி ரகுராம் கேள்வி :
இந்த அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு பீஸ்ட் திரைப்படம் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் இந்த விவகாரத்தில் காயத்ரி ரகுராம், விஜய்க்கு ஆதரவாக ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ‘பீஸ்ட் திரைப்படம் தீவிரவாதத்திற்கு எதிரானது, முஸ்லீம்களுக்கு எதிரானது அல்ல. ஏன் தடை செய்ய வேண்டும் ? என்று பதிவிட்டுள்ளார். சூர்யா படத்தின் விஷயத்தில் தொடர்ந்து எதிராக குரல் கொடுத்து வந்த காயத்ரி, விஜய் படத்திற்கு ஆதரவு தெரிவித்து இருப்பது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏற்கனவே விஜய்க்கு ஆதரவு தெரிவித்த காயத்ரி :
ஏற்கனவே, விஜய்யின் சொகுசு கார் விவாகரத்தில் விஜய்க்கு ஆதரவாக ட்வீட் போட்டு இருந்தார் காயத்ரி ரகுராம். அதில்,பலரது வாழ்க்கையில் விஜய் ஒரு உண்மையான ஹீரோ தான் பிரதமரின் கொரோனா நிவாரண நிதி மற்றும் முதலமைச்சர் நிவாரண நிதி என்று அவர் கொடுத்திருக்கிறார். எத்தனையோ மாணவர்களை படிக்க வைத்திருக்கிறார். எத்தனையோ ரசிகர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்திருக்கிறார். நீதிமன்றத்தில் நடந்தது நீதிமன்றத்தோடு முடிந்துவிட வேண்டும்.
யூத் பட வாய்ப்பு :
அவர் செய்த உதவிகளை நாம் மறக்கக் கூடாது இந்த ஒரு விஷயத்திற்காக அவர் செய்த நல்ல விஷயங்களை மறக்க கூடாது என்று கூறியிருந்தார். அதே போல காயத்ரி ரகுராம் விஜய்யுடன் நடனமாடும் வாய்ப்பை கூட இழந்து இருக்கிறார். ஆம், விஜய் நடிப்பில் வெளியான ‘யூத்’ படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலான ‘ஆல்தோட்ட பூபதி’ பாடலில் சிம்ரனுக்கு முன் காயத்ரி ரகுராம் தான் ஆட வேண்டியதாம். இதை அவரே பேட்டி ஒன்றில் கூறி இருந்தார்.