எதற்கும் துணிந்தவன் படத்தை பார்த்துவிட்டு ட்விட்டரில் காயத்ரி ரகுராம் வெளியிட்ட விமர்சனம்.

0
818
ET
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதிலும் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ஜெய் பீம் படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது சூர்யா அவர்கள் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், வினய், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

-விளம்பரம்-

பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டுபவர்களை வேட்டையாட வக்கீல் கோட்டை கழட்டி வைத்து விட்டு வேட்டிக் கட்டிக் கொண்டு சூர்யா செய்யப் போகும் சூரசம்ஹாரம் தான் எதற்கும் துணிந்தவன். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் இன்று வெளியா கி உள்ளது. ஆனால், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தை திரையரங்குகளில் வெளியிட கூடாது என்று அரசியல் கட்சியினர் பலர் போராட்டம் செய்தனர்

- Advertisement -

காயத்ரி ரகுராம் விமர்சனம் :

மேலும், படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் எதற்கும் துணிந்தவன் படத்தை பார்த்துவிட்டு காயத்ரி ரகுராம். அதில் ‘எதற்கும் துணிந்தவன் பார்த்தேன் படத்தின் 2nd half அரசியல் மிரட்டல் வியாபாரத்தால் பிரச்சனை மற்றும் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் innocent பெண்களுக்கு தைரியத்தை அளிக்கிறது. Dialogues good. 1st half மசாலா மற்றும் வேடிக்கையாக உள்ளது. பெண்கள் அச்சுறுத்தல்களுக்கு ஒருபோதும் அஞ்சக்கூடாது.

பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும் :

நம் உடல் வெட்கமானதாகவோ அல்லது ஆபாசமாகவோ இல்லை. பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும். பெண்கள் மீண்டும் போராட வேண்டும். வீடியோ அல்லது பாலியல் ரீதியாக உங்களை அச்சுறுத்தும் போது ஆண்கள் கூட வெட்கக்கேடான இடத்தில் உள்ளனர், அவர்களுக்கும் குடும்பம் உள்ளது. வெளியே வந்து தைரியமாக அவர்களை அம்பலப்படுத்துங்கள்.. ஆண்கள் பெண்களை பாதுகாக்க பிறந்தவர்கள் என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

ஏற்கனவே, சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய் பீம்’ திரைப்படம் வன்னியர் சமூகத்தினரை இழிவு படுத்தியதாக சர்ச்சைகள் எழுந்தது. மேலும், ட்விட்டரில் westandwithsurya என்ற ஹேஷ் டேக்குகளை கூட சூர்யாவின் ரசிகர்கள் ட்ரெண்ட் ஆக்கினர். அந்த வகையில் சமீபத்தில் சூர்யாவின் புகைப்படம் போட்டு, அவருக்கு பின்னால் சில நாய்கள் குறைப்பது போல சித்தரிக்கப்பட்டு இருக்கும் போஸ்டர் ஒன்றை சூர்யா ரசிகர்கள் பகிர்ந்து இருந்தனர்.

ஜெய் பீம் குறித்து காயத்ரி :

இந்த நிலையில் இந்த போஸ்டர் குறித்து பதிவிட்ட காயத்ரி ரகுராம் ‘நாய்கள் திருடன் பார்த்து குரைக்கும் அல்லது தெரியாதவர்களை எச்சரிக்க குரைக்கும் அல்லது தீய சக்தியை பார்த்து குரைக்கும்.. பைரவர் கடவுள் மக்களுக்கு பாதுகாவலர் மற்றும் மக்களுக்கு துணை. சூர்யா ரசிகர்கள் இந்த போஸ்டரை தெரியாமல் தவறுதலாக உருவாக்கினார்கள் என்று பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement