தனது தந்தையின் கையில் ஒரு வயது குழந்தையாக இருக்கும் வீடியோவை பகிர்ந்த காயத்ரி ரகுராம்.

0
5074
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீஸனின் பல்வேறு சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர். அந்த வகையில் நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராமும் ஒருவர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஜூலிக்கு பிறகு அதிகம் வெறுக்கப்பட்டவர் காயத்ரி ரகுராம் தான். சீசன் 1 நிகழ்ச்சியில் இவர், ஓவியவிடம் அடிக்கடி வம்பிழுந்து வந்ததால் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தது சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர். 

-விளம்பரம்-
https://twitter.com/gayathriraguram/status/1260123857815396352

இவர் பிரபல நடன இயக்குனர் ரகுராம் மாஸ்டர் என் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது இவர் தனது 14 வயதில் இருந்தே சினிமா துறையில் இருந்து வருகிறார் இவர் 2002 ஆம் ஆண்டு பிரபுதேவா மற்றும் பிரபு நடிப்பில் வெளியான சார்லி சாப்ளின் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் ஸ்டைல் பரசுராம் விசில் விகடன் போன்ற பல்வேறு படங்களில் நடித்து வந்தார். வயதும் உடல் எடையும் கூடியதால் இவருக்கு சினிமாவில் நுழைந்த சிறிது காலத்திலேயே கதாநாயகி ஆகும் வாய்ப்பு கைநழுவி போனது.

- Advertisement -

அதன் பின்னர் வானம் வைராஜாவை இது என்ன மாயம் போன்ற பல்வேறு படங்களில் துணை நடிகையாக நடித்து இருந்தார் இறுதியாக தமிழில் கடந்த ஆண்டு வெளியான அருவம் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் தொலைக்காட்சியில் நடுவராகவும் பங்கேற்று வந்தார் காயத்ரி ரகுராம் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி சரியான கருத்துக்களை பதிவு விடுவது வழக்கம்.

மேலும். இவர் தீவிர பாஜக கட்சியின் தொண்டர் என்பதும் குறிப்பிடத்தக்கது. காயத்ரி ரகுராம் பெரும்பாலும் புகைப்படங்களை பதிவிடுவது குறைவுதான். இந்தநிலையில் தனது ஒரு வயதில் தனது தந்தையுடன் இருக்கும் வீடியோ ஒன்று சமீபத்தில் பதிவிட்டுள்ளார் காயத்ரி ரகுராம். அதில் தனது தந்தையின் சிரிப்பையும் தனது தந்தையின் சிரிப்பையும் அரவணைப்பும் மிகவும் மிஸ் செய்வதாக மிகவும் உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement