இது தான் மனித தன்மையா ? விஜய் சேதுபதியை மீண்டும் வம்பிழுக்கும் காயத்ரி.

0
12675
Vijaysethupathi
- Advertisement -

மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி பேச்சுக்கு நடிகை காயத்ரி தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். தளபதி விஜயின் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்று கிழமை (மார்ச் 15 ) ஹோட்டல் லீலா அரண்மனையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவை சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்பு செய்தார்கள். இந்த விழாவில் ரசிகர்களுக்கு யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இந்த விழாவில் இப்படத்தை சேர்ந்த பலரும் கலந்து கொண்டார்கள். பின் ஒருவர் பின் ஒருவர் மாஸ்டர் படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார்கள்.

-விளம்பரம்-

கடவுளை காப்பாத்துறேன்னு சொல்லிட்டு இருக்குற கும்பல்களிடம் இருந்து தள்ளியே இருங்க. ஒருத்தன் ஏதாவது மதத்த பத்தி பேசுனா, அதுக்கு தன்னோட மதத்துல இருக்கிறதுல இருந்து பேசாம, மனிதத்தையும்; மனிதநேயத்தையும் பேசுங்க. மனிதம் ஒன்றே மனிதனை காப்பாற்றும் என்றார். விஜய் சேதுபதியின் இந்த கருத்தை பிரபல பிபி பாஸ் நடிகை காயத்ரி விமர்சித்துள்ளார்.

- Advertisement -

இதையும் பாருங்க : கொஞ்சமாவது மதிப்பு கொடுங்க. கிண்டலால் கடுப்பான நடிகை மஞ்சிமா.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த அவர்,“மற்ற மனிதர்கள் மீதான உங்களின் நம்பிக்கைக்கு எனது வாழ்த்துகள் நண்பா. எந்த நம்பிக்கையையும் அழிக்க முடியாது. எல்லா மதத்திலும் கோடிக்கணக்கான நம்பிக்கைவாதிகள் உள்ளனர். நாங்கள் அனைவரும் முட்டாள்கள் என நீங்கள் நினைத்தால், பொய்களையும் வெறுப்பையுமே பரப்பும் மற்ற நபர்களை நம்பும் உங்களுக்காக நான் வருந்துகிறேன். வாழ்க்கையே கடவுளால் வடிவமைக்கப்பட்டதுதான். 

-விளம்பரம்-

இன்றைய உலகில் சக மனிதர் உங்களுக்கு உதவி செய்து, உங்களை உயர்த்தி அதனால் அவரும் மகிழ்வார் என நினைப்பது ஒரு பெரிய ஜோக். அப்படி ஒருவர் உயர்த்திவிட்டால், அதற்கு அவருடைய தெய்வீக தன்மையும், தெய்வ பற்றுமே காரணமாஅக இருக்கும்” என்று பதிவிட்டிருந்தார். ஆனால், அந்த ட்வீட் திடீரென்று நீக்கப்பட்டது. காயத்ரியின் இந்த கருத்தால் தற்போது விஜய் சேதுபதி ரசிகர்கள் காயத்ரி மீது கடும் கடுப்பில் இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் விஜய் சேதுபதி புகைப்படம் வைக்கப்பட்ட சில நம்பர்களில் இருந்து காயத்ரிக்கு ஆபாச மெசேஜ்கள் வந்துள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள காயத்ரி, இதுதான் நாம் அனைவரும் பார்க்கும் மனிதநேயம். அவர்கள் உங்கள் ரசிகர்கள் அல்ல. அவர்கள் உங்கள் ரசிகர்களாக காட்டிக்கொள்ள வி.சி.கே மற்றும் டி.எம்.கே உறுப்பினர்கள் எண்களைப் பகிர்ந்துஇப்படி செய்கிறார்கள். அவர்கள் உங்கள் ரசிகர்களாக இருந்தால், இது அவர்களுக்கு இருக்கும் மனிதநேயம். புருடாவிட்ர சாமி கும்பல் சிறந்தவர்களா அல்லது இந்த நெறிமுறையற்ற மக்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement