கொஞ்சமாவது மதிப்பு கொடுங்க. கிண்டலால் கடுப்பான நடிகை மஞ்சிமா.

0
4314
- Advertisement -

உலகம் முழுவதும் தற்போது பயங்கர பீதியை ஏற்படுத்தி இருப்பது இந்த கரோனா வைரஸ் தான். சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் தான் இந்த கரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. தற்போது உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் இந்த கரோனா வைரஸ் தொற்று பரவி உள்ளது. இந்த கரோனா வைரஸினால் பல்லாயிரக் கணக்கானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த கரோனா வைரஸினால் ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்து உள்ளார்கள்.

-விளம்பரம்-

- Advertisement -

இந்த கரோனா வைரசுக்கு இதுவரை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கவில்லை. இதனால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் பீதியில் உள்ளார்கள். மேலும், கரோனா வைரஸ் தாக்குதலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பல்வேறு நாடுகளில் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. மக்கள் ஓரிடத்தில் கூடுவதை மிகவும் தவிர்த்துக் கொண்டு வருகின்றார்கள். இந்தியாவின் பல மாநிலங்களிலும் இந்த கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது. ஆகவே படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இதையும் பாருங்க : தளபதி 65 இயக்குனர் நான் இல்ல. ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்த இயக்குனர்.

-விளம்பரம்-

இந்நிலையில் சினிமா பிரபலங்களும், தயாரிப்பாளர்களும் ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள். அரவிந்த்சாமி, விஷால், கௌதம் கார்த்திக் என பல நடிகர்கள் சோசியல் மீடியாவில் கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வை சொல்லி வருகிறார்கள். அந்த வகையில் நடிகை மஞ்சிமா மோகன் அவர்களும் கரோனா வைரஸ் குறித்து தன்னுடைய கருத்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியது, நான் மாஸ்க் அணிந்து கொண்டு செல்லும் போது பலர் என்னை பார்த்து கிண்டலாக சிரித்தார்கள். நம்முடைய பாதுகாப்பை நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.

யாரையும் கட்டாயப்படுத்தி பாதுகாக்க முடியாது. மேலும், ஒருவர் பாதுகாக்க இருக்கிறார் என்றால் அவர்களை கேலி செய்ய வேண்டாம் என்று கூறியிருந்தார். இதற்கு முன்னாடியே கரோனா வைரஸ் தொடங்கிய போதே மஞ்சிமா மோகன் இடம் பலபேர் கரோனா வைரஸ் பற்றி கூறுங்கள் என்று கேட்டிருந்தார்கள். அதற்கு அவர் நான் என்ன சொல்வது. பாதுகாப்பு விஷயத்தில் அனைவரும் கவனமாக இருக்கவேண்டும். அரசாங்கம் சொல்வதைக் கேட்டு நடந்து கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கரோனா வைரஸின் முதல் நடவடிக்கையாக அனைவரும் பாதுகாப்பாக இருப்பதன் மூலம் தான் இந்த உலகத்தை காப்பாற்ற முடியும். பாதுகாப்பு மட்டும் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் காப்பாற்றும். ஒரு நாளைக்கு பத்து முறையாவது கைகளை வீட்டிலேயே கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அனைவரும் வெளியில் செல்வதை தவிர்த்து வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் வைரஸ் பரவாமல் தடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அனைத்து சினிமா தியேட்டர்கள், மால்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூட உத்தரவிட்டு உள்ளார்கள்.

இருப்பினும் 10, 11, 12ம் வகுப்புக்கான ஆண்டுப் பொதுத் தேர்வுகள் மட்டும் அட்டவணைப்படி நடைபெற உள்ளன. மேலும், மருத்துவமனைகள் மட்டும் தொடர்ந்து செயல்படும் என்றும் கூறி உள்ளார்கள். கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ” அச்சம் என்பது மடமையடா” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். இவர் மலையாளம் ,தெலுங்கு ,தமிழ் என பல மொழி திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Advertisement