அய்யய்யோ, விநாயகர் பி ஜேபி யில் இணைந்துவிட்டார் டோய் – கேலிக்கு உள்ளான பிக் பாஸ் நடிகையின் புகைப்படம்.

0
991
gayathri

இந்தியாவில் கடந்த 5,6 மாத காலமாக கொரோனா பிரச்சனை காரணமாக ஒட்டு மொத்த நாடும் முடங்கியுள்ளது. மேலும் , ஊரடங்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து, ஊர்வலமாக எடுத்துச் செல்லவும், அதனை கடலில் கரைக்கவும் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில் நடிகை காயத்ரி ரகுராம், விநாயகர் சிலையை வழிபடும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார், அதில் காவி நிறத்தில் இருக்கும் விநாயகர் கையில் பா ஜ கவின் கொடியும் பொறுத்தப்பட்டு இருக்கிறது. மேலும், இப்படி ஒரு சிலையை பா ஜ க வின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் சார்பாக உருவாக்கப்பட்ட சிலை என்று காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். இந்த பதிவை கண்ட சிலர் விநாயகர் கூட பி ஜே பியில் இணைந்துவிட்டாரா என்று கேலி செய்து வருகின்றனர்.

- Advertisement -

ஏற்கனவே விநாயகர் சதுர்த்தி பண்டிகையை வழக்கம் போல கொண்டாட வேண்டும் என்றும் வழக்கம் போல வீதிகளில் விநாயகர் வைப்பது வழிபடவும், வீதி உலா செல்லவும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பினர் சிலர் கோரிக்கை வைத்தனர். அதே போல ஆர் எஸ் எஸ் அமைப்பின் சார்பாக விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

அந்த வகையில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பைச் சேர்ந்த, துாத்துக்குடி வழக்கறிஞர் ராமசாமி, ‘தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு, தடை விதித்தது, ஹிந்துக்களின் உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளது. ‘தகுந்த வழிகாட்டுதல்களுடன், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதிக்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், கோவில் சித்திரைத் திருவிழா உட்பட பாரம்பரிய முக்கிய விழாக்கள், இம்முறை நடக்கவில்லை.மக்கள் நலன் கருதி, தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. அரசின் முடிவில் தலையிட விரும்பவில்லை. மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

Advertisement