டேனியல் பாலாஜி ஒரு இந்து, அவரது உண்மையான பெயர் இதான் – காட் மேன் ட்ரைலர் சர்ச்சை குறித்து காயத்ரி ரகுராம்.

0
6114
godman
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீஸனின் பல்வேறு சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர். அந்த வகையில் நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராமும் ஒருவர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஜூலிக்கு பிறகு அதிகம் வெறுக்கப்பட்டவர் காயத்ரி ரகுராம் தான். சீசன் 1 நிகழ்ச்சியில் இவர், ஓவியவிடம் அடிக்கடி வம்பிழுந்து வந்ததால் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தது சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர். 

-விளம்பரம்-
https://twitter.com/DanielBalaje/status/1265262805927620608

அதே போல சில சர்ச்சையான விஷயங்கள் குறித்தும் காயத்ரி ரகுராம் பேசாமல் இருந்தது இல்லை. அதிலும் இந்து மதத்திற்கு எதாவது வந்தால் காயத்ரி ரகுராம் குரல் கொடுக்காமல் இருந்தது இல்லை. அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ‘காட் மேன்’ ட்ரைலர் குறித்து ட்வீட் செய்துள்ளார் காயத்ரி ரகுராம். ‘ஜீ5’ என்ற, ஓ.டி.டி., தளத்தில், ‘காட்மேன்’ என்ற தொடர் வெளியாக உள்ளது. டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த தொடரின் டிரெய்லர், சில நாட்களுக்கு முன் வெளியானது.அந்த தொடரில், காவி உடை அணிந்து வரும் ஒருவர், ‘நான் கண்ட பிராமணர்கள் எல்லாம் அயோக்கியர்கள்’ என்று கூறிய வசனம் தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் பாருங்க : விக்ரம் படத்தில் அரை டவுசர் போட்டுக்கொண்டு நடித்துள்ள பிரபல இயக்குனர். பாத்தா ஷாக்காகிடுவீங்க.

- Advertisement -

‘காட் மேன்’ என்ற ஆன்லைன் தொடரின் டிரெய்லரில், வேண்டுமென்றே ஒரு பிரிவினரின் மனதை புண்படுத்தும் நோக்கிலும், மதரீதியாக பகைமையை துாண்டும் விதத்திலும், அதன் மூலம், பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் காட்சிகள் அமைந்துள்ளன. இப்படத்தின் இயக்குனர், பாபு யோகேஸ்வரன், தயாரிப்பாளர் இளங்கோ, நடிகர்கள், நிர்வாக இயக்குனர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ‘விஸ்வ ஹிந்து பரிஷத் – தமிழ்நாடு’ சார்பில், சென்னை மாநகர அமைப்பாளர் சத்தியமூர்த்தி, கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கூட அளித்திருந்தார்.

இந்த நிலையில் இந்த காட் மேன் ட்ரைலர் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள காயத்ரி, கோட்மன் சர்ச்சை குறித்து- எனது நண்பர்களான சில நடிகர்களிடம் பேசினேன். தயவுசெய்து நடிகர்களைக் குறிவைத்து, அவர்களின் தனியுரிமையைத் தொந்தரவு செய்ய வேண்டாம். டேனியல் பாலாஜி ஒரு இந்து, டேனியல் என்ற பெயர் சித்தி சீரியலில் இருந்து எடுக்கப்பட்டது. அவரது உண்மையான பெயர் பி.சி.பாலாஜி. இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

-விளம்பரம்-

தொலைபேசி அழைப்புகள் மூலம் நடிகர்கள் அல்லது பிரபலங்களை துன்புறுத்துவது நிறுத்தப்பட வேண்டும். பாலாஜி பெரும்பாலும் எதிர்மறை கதாபாத்திரங்களில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். முழு ஸ்கிரிப்ட் அல்ல வலைத் தொடரில் நடிகர்கள் தங்கள் பங்கை மட்டுமே விவரித்தனர். ஆம், டிரெய்லர் சர்ச்சைக்குரியது ஏற்றுக்கொள்ள முடியாதது & ZEE5 டீஸரை மாற்றியுள்ளது.

இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் விசாரிக்கப்பட வேண்டும். பிராமணர்களை நேரடியாக குறிவைத்து இதுபோன்ற டிரெய்லருக்காக நான் அவர்களை கண்டிக்கிறேன். OTT இயங்குதளத்திற்கு தணிக்கை சான்றிதழ்கள் தேவையில்லை என்றாலும் தயவுசெய்து எங்கள் கலாச்சாரத்திற்கு எதிரான விஷயங்கள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும் ZEE5 ஐ நான் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Advertisement