விக்ரம் படத்தில் அரை டவுசர் போட்டுக்கொண்டு நடித்துள்ள பிரபல இயக்குனர். பாத்தா ஷாக்காகிடுவீங்க.

0
3265
vikram
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான ஒளிப்பதிவாளராக திகழ்ந்தவர் கே வி ஆனந்த். இவர் திரைப்பட ஒளிப்பதிவாளர் மட்டுமில்லாமல் சிறந்த இயக்குனரும் ஆவார். இவர் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த கனா கண்டேன் படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமானார். பின் இவர் அயன், கோ, மாற்றான், அனேகன், கவண்,காப்பான் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை தமிழில் இயக்கியுள்ளார். அதற்கு முன்னரே இவர் பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி உள்ளார்.

-விளம்பரம்-

இவர் 1995 ஆம் ஆண்டு முதல் ஒளிப்பதிவாளராக சினிமா துறையில் பணியாற்றி வருகிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். மேலும், தேசிய விருது முதல் பல விருதுகளை வாங்கியுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் இயக்குனர் கே வி ஆனந்த் அவர்கள் நடிகராகவும் படத்தில் நடித்து உள்ளார். கே வி ஆனந்த் அவர்கள் நடித்த படத்தின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. 1992ஆம் ஆண்டு பிசி ஸ்ரீராம் இயக்கத்தில் வெளிவந்த படம் மீரா. இந்த படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்திருந்தார்.

இந்த படத்தில் கே வி ஆனந்த் அவர்கள் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். தற்போது இந்த படத்தின் புகைப்படம் சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதனை பார்த்து பலரும் இது கே வி ஆனந்த்தா! என்று வியப்பில் கேட்டுள்ளார்கள். இவர் சிறந்த இயக்குனர், ஒளிப்பதிவாளர் மட்டுமில்லாமல் சிறந்த நடிகர் என்றும் பாராட்டி வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement