திமிரு, தரம் கெட்ட நடிகை, காயத்ரி ரகுராமை கழுவி ஊற்றிய பிரபலம். இதான் காரணம்.

0
1963
gayathri-raguram
- Advertisement -

திருமாவளவனை பற்றி தரைகுறைவாக பேசிய காயத்ரிராமை கண்டித்துள்ளார், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன். மேலும், அவர் காயத்ரி போன்றவர்களிடம் பேசினால் என் மரியாதையை நானேக் குறைத்துக் கொள்ளவது போன்றது என்றும் கூறியுள்ளார். பிக் பாஸ் காயத்ரி ரகுராம் என்று சொன்னால் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு காயத்ரி ரகுராம் மக்களிடையே பயங்கரமாக பிரபலமாகி விட்டார். மேலும்,காயத்ரி ரகுராம் அவர்கள் மிகப் பிரபலமான நடன இயக்குனர் ரகுராம் அவர்களின் மகள் ஆவார். மேலும்,காயத்ரி ரகுராம் அவர்கள் தென்னிந்தியத் திரைப்படத்துறையில் நடன கலைஞராக பணிபுரிகிறார். இவர் நடன கலைஞர் மட்டுமல்ல திரைப்பட நடிகையும் ஆவார். அதே போல பா ஜ கவின் தீவிர தொண்டரான இவர் பா ஜ க குறித்து யாரவது எதாவது பேசினால் உடனே பொங்கி ட்விட்டரில் பதிவுகளை போட்டு தள்ளி விடுவார்.

-விளம்பரம்-
Image result for gayathri raguram thirumavalavan"

- Advertisement -

இந்நிலையில் நடிகை காயத்ரி ரகுராம் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் ‘திருமாவளவனை’ பற்றி தாறு மாறாக பல கருத்துக்களை பதிவிட்டு உள்ளார். மேலும், இது குறித்து சமூக வலைத்தளங்களில் பல சர்ச்சைகள் எழுந்து வந்ததே. அதுமட்டும் இல்லாமல் காயத்ரி ரகுராம் குறிப்பிட்ட பதிவுகளுக்கு பல எதிர் விமர்சனங்கள் தந்தார்கள் நெட்டிசன்கள். மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமால்வளவன் அவர்கள் காயத்ரி ரகுராம் மேனஜரிடம் போன் நம்பரை வாங்கி அவருடைய தொண்டர்களிடம் கொடுத்து உள்ளார். மேலும், திருமால்வளவன் தொண்டர்கள் காயத்ரிக்கு தொடர்ந்து போன் செய்து கேவலமாக பேசி வருவதாகவும், அதிலும் ஒரு சில பேர் அசிங்கமான கருத்துக்களை போட்டு வருவதாகவும் சொல்லி இருந்தார்.

இதையும் பாருங்க : இலக்கை அடைந்ததா தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. முழு விமர்சனம் இதோ.

அதுமட்டும் இல்லாமல் திருமாவளவன் இதற்கு முன்னரே காயத்ரியிடம் போன் செய்து தவறான முறையில் பேசி உள்ளார் என்று கூறியிருந்தார். இதனால் தான் காயத்ரி ரகுராம் தாறுமாறாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமால்வளவனை பேசியதாக கூறப்படுகிறது. ஆனால், அப்படி எல்லாம் பேசவில்லை என்று கட்சி உறுப்பினர்கள் போராட்டம் செய்தார்கள். இந்நிலையில் திருமாவளவன் குறித்து பேசியதற்கு வேல்முருகன் அவர்கள் கூறியது, காயத்ரி ரகுராம் என்னுடைய சுண்டு விரலுக்கு கூட தகுதி இல்லாதவர். அவர் ஒரு தரம் கெட்ட நடிகை. மேலும், தரம்கெட்ட நடிகையை பற்றி பேசி நான் என்னைத் தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை. காயத்ரி ரகுராம் பணம் வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார், எந்த எல்லைக்கும் போவார் என்பதில் ஐயம் இல்லை.

-விளம்பரம்-

அந்த மாதிரி யோகிதை இல்லாதவர்கள் கேட்கும் கேள்விக்கு என்னால் பதில் அளிக்க முடியாது என்று தாறுமாறாக எடுத்து உள்ளார். மேலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்.பி. அரசியல் தலைவரை செருப்பால் அடிப்பேன் என்று கூறுவது மிக கேவலமான அநாகரிகமான வார்த்தைகள் ஆகும். மேலும், 27ஆம் தேதி மெரினா பீச்சுக்கு வந்து பார் என்று சவால் விடுத்துள்ளார். இவர் திரைத் துறையில் இருக்கிறார் என்பதற்காக வாய்க்கு வந்ததெல்லாம் பேசுவார்களா?? இவர்களுடைய அகம்பாவம், ஆணவம் எல்லாம் இவர்களோடு தான் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்காக ஒரு அரசியல் கட்சித் தலைவரை தாறுமாறாக பேச கூடாது. இதை நான் பொறுத்துக் கொள்ளவும் மாட்டேன், ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என கூறி உள்ளார் வேல்முருகன்.

Advertisement