கோல்டன் டிக்கெட்டை வென்று இறுதி போட்டிக்கு நுழைந்த நபர் யார் தெரியுமா.!

0
27423

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்க இறுதிப் போட்டிக்கு நேரடியாக செல்லும் வாய்ப்பிற்கான டிக்கெட் டு பினாலே டாஸ்குகள் நடைபெற்று வருகிறது. இது வரை ஆறு டாஸ்க்குகள் முடிவடைந்த நிலையில் இனி வரும் டாஸ்க்குகளில் வெற்றி பெற வேண்டும் என்று போட்டியாளர்கள் அனைவரும் போராடி வருகின்றனர்.

bigg-boss

இதுவரை நடந்து முடிந்த டாஸ்கில் தற்போது வரை முகென் முதல் இடத்தில இருக்கிறார். அவரை தொடர்ந்து சாண்டி, ஷெரின், தர்ஷன், சேரன், லாஸ்லியா பின்னர் இறுதியாக கவின் இருக்கிறார்கள். எனவே, கடைசி மூன்று இடத்தில் இருப்பவர்களுக்கு இந்த டாஸ்கில் வெற்றி பெற வாய்பே இல்லை. எனவே. முகென், சாண்டி, தர்ஷன், ஷெரின் ஆகியோருக்கு தான் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கபட்டது.

- Advertisement -

இந்த நிலையில் கோல்டன் டிக்கெட் டாஸ்ககில் முகென் வெற்றி பெற்றதாக அறிவிக்கபட்டுள்ளார் என்று தகவகல்கள் வெளியாகியுள்ளது. நேற்றைய நிகழ்ச்சியில் இந்த கோல்டன் டிக்கெட்டுக்கான இறுதி டாஸ் கொடுக்கப்பட்டது இதில் போட்டியாளர்கள் அனைவரும் ஒரு மிதிவண்டியை மிதிக்க வேண்டும், அந்த மிதிவண்டியில் மற்ற போட்டியாளர்கள் முகமோ அல்லது அவர்கள் முகமோ இருக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. யார் புகைப்படம் பொருத்தப்பட்ட மிதிவண்டி அதிகநேரம் மிதிக்கப்படுகிறது அவர் இந்தடாஸ்கில் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். அந்தவகையில் நேற்று கவின் முதல் ஆளாக மிதி வண்டியை விட்டு இறங்கிய நிலையில் இரண்டாவது ஆளாக ஷெரின் இறங்கி இருந்தார்.

ஒருவேளை கவின் மிதித்த மிதிவண்டியில் முகேன் புகைப்படம் இருந்தால் கூட முகெனுக்கு ஒரு புள்ளிகள் வழங்கப்படும். ஏற்கனவே 41புள்ளிகள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். எனவே, முகென் ஒரு புள்ளி எடுத்தால் கூட அவர் 42புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தை பிடித்து விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த டெஸ்டில் வெற்றி பெற வாய்ப்பு அதிகமாகத்தான் இருந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement