சன்னி லியோன் யாருனு ஆனந்த் தான் சில படம் கமிச்சான் – அரங்கை சிரிப்பலையில் ஆழ்த்திய gp முத்து

0
670
gpmuthu
- Advertisement -

”டிக்டாக் நண்பர்களே” என்ற வார்த்தையை கேட்டதும் டிக் டாக் ரசிகர்களுக்கும் நினைவிற்கு வருவது இந்த ஜி பி முத்து தான். இவரது நெல்லைப் பேச்சுக்கும், நையாண்டியாகப் பதிவேற்றும் வீடியோவிற்கும் என்று டிக்டாக்கில் ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது. டிக் டாக் தடை செய்யப்பட்டதும் டிக் டாக் வாசிகள் பலரும் யூடுயூப், இன்ஸ்டாகிராம் என்று இடம் பெயர்ந்து விட்டனர். அந்த வகையில் ஜி பி மமுத்துவும் இன்ஸ்டாகிராமில் மற்றும் யூடுயூபில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அதிலும் இவரது யூடுயூப்சேனலில் இவர் பதிவிடும் வீடியோ தான் தற்போது வைரல்.

-விளம்பரம்-

இவரது யூடுயூப் சேனலில் தனக்கு அனுப்பும் லெட்டர்களை படித்து காண்பித்து வருகிறார். அதில் கண்ட கண்ட பொருட்களை எல்லாம் பலர் அனுப்புகின்றனர். அது ஒரு புறம் வேடிக்கையாக இருந்தாலும் இவரது தமிழில் இவர் அதை படித்து அதற்கு இவர் கொடுக்கும் பதில்கள் தான் மிகவும் வேடிக்கையாக இருந்தது வருகிறது. இவரது வீடியோகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவும் கிடைத்து வருகிறது.

- Advertisement -

இவரது யூடுயூப் சேனலை 3லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகிறார்கள். யூடுயூபில் இவருக்கு கிடைத்த பிரபலத்தை வைத்து சமீபத்தில் இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பும் கிடைத்து இருந்தது. இந்த சீசனில் ஜிபி முத்து கண்டிப்பாக டாப் 5 போட்டியாளர்களில் ஜி முத்து நிட்சயம் வருவார் என்று அவரின் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில் நேற்று திடீரென பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார் ஜிபி முத்து.

கடந்த சில தினங்களாக ஜிபி முத்து தன் குடுமபத்தினர் நினைப்பாக இருக்கிறது அதனால் நான் வீட்டிற்கு போக வேண்டும் என்று கூறி வந்தார்.அவரை பிக் பாஸும் அழைத்து எத்தனையோ சமாதானம் செய்தார். ஆனாலும், தனக்கு தன் பிள்ளை நினைவாகவே இருக்கிறது நான் போய்தான் ஆக வேண்டும் என்று தன் முடிவில் உறுதியாக இருந்தார். இந்த நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் கூட கமல, ஜிபி முத்துவிடம் இந்த நிகழ்ச்சியால் எந்த அளவு புகழ் வரும் என்பது உங்களுக்கு தெரியும் என்று சொன்னார்.

-விளம்பரம்-

ஆனால், எனக்கு புகழ் பணத்தை விட என் பிள்ளை தான் முக்கியம் என்று கூறிவிட்டு பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார். பிக் பாஸுக்கு செல்வதற்கு முன்பாகவே ஜிபி முத்து ‘Oh My Ghosh’ என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் பிரபல ஆபாச நடிகை சன்னி லியோன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், காமெடி நடிகர் சதீஷ், குக்கு வித் கோமாளி தர்ஷா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள்.

மேலும், இந்த விழாவில் பேசிய ஜிபி முத்து ‘எனக்கு இதான் முதல் படம். சன்னி லியோன் யாருன்னு எனக்கு தெரியாது. தம்பி மணி தான் படம் காமிச்சான்’ என்று Gp முத்து சொன்னதும் அரங்கமே சிரிப்பலையில் ஆழ்ந்தது. இதை தொடர்ந்து பேசிய ஜி பி முத்து ‘ஐய்யயோ, தப்பா ஏதும் நினைக்காதீங்க, படம்னா சன்னி லியோன் படம் தான்’ என்று கூறி இருந்தார். இதை தொடர்ந்து சன்னி லியோனுக்கு பால்கோவா ஊட்டிவிட்டு குத்தாட்டமும் போட்டார் ஜிபி முத்து.

Advertisement