அன்று அர்ச்சனாவிற்கு அட்வைஸ், இன்று மேடையில் அர்ச்சனாவை கண்டதும் Gp முத்துவின் Reaction – வேற லெவல் வீடியோ.

0
493
gpumuthu
- Advertisement -

”டிக்டாக் நண்பர்களே” என்ற வார்த்தையை கேட்டதும் டிக் டாக் ரசிகர்களுக்கும் நினைவிற்கு வருவது இந்த ஜி பி முத்து தான். இவரது நெல்லைப் பேச்சுக்கும், நையாண்டியாகப் பதிவேற்றும் வீடியோவிற்கும் என்று டிக்டாக்கில் ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது. டிக் டாக் தடை செய்யப்பட்டதும் டிக் டாக் வாசிகள் பலரும் யூடுயூப், இன்ஸ்டாகிராம் என்று இடம் பெயர்ந்து விட்டனர். அந்த வகையில் ஜி பி மமுத்துவும் இன்ஸ்டாகிராமில் மற்றும் யூடுயூபில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அதிலும் இவரது யூடுயூப்சேனலில் இவர் பதிவிடும் வீடியோ தான் தற்போது வைரல்.

-விளம்பரம்-

இவரது யூடுயூப் சேனலை 3லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகிறார்கள். யூடுயூபில் இவருக்கு கிடைத்த பிரபலத்தை வைத்து தற்போது இவருக்கு சினிமாவிலும் வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் இவர் பிரபல ஆபாச பட நடிகை சன்னி லியோன் நடிக்கும் ‘Oh My Ghosh’ என்ற நேரடி தமிழ் படம் ஒன்றில் நடித்திருக்கிறார். காமெடி நடிகர் சதீஷ், குக்கு வித் கோமாளி தர்ஷா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள்.

- Advertisement -

சமீபத்தில் தான் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற்றது. இதில் தொகுப்பாளினியாக அர்ச்சனா இருந்தார். சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்த அர்ச்சனா கடந்த சில வருடங்களாக ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ஆஸ்தான தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். அதே போல இவர் பணியாற்றி முதலில் காமெடி டைம், இளமை புதுமை போன்ற நிகழ்ச்சியில் பணியாற்றினார்.மேலும், தமிழில் கூட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருந்தது.

ஆனால், பிக் பெரும் நிகழ்ச்சிக்கு பின் இவரது பெயர் கொஞ்சம் டேமேஜ் ஆனது. இதனால் சமூக வலைதளத்தில் அடிக்கடி இவரை விமர்சித்து வருகின்றனர். இதனாலேயே இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் எந்த பேட்டியிலும் பங்கேற்கவில்லை. ஆனால், இன்ஸ்டாகிராமில் மட்டும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதே போல இவர் வாவ் லைப் என்ற யூடுடுயூப் சேனலையும் நடத்தி வருகிறார். இந்த சேனலை 5 நடத்தி மேற்பட்டோர் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்த யூடுயூ சேனலில் தனது தங்கை மற்றும் தனது மகளுடன் சேர்ந்து வீடியோ பதிவிட்டு வருகிறார் அர்ச்சனா. அந்த வகையில் சமீபத்தில் இவர் தனது வீட்டு பாத்ரூம் டூர் என்று வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

-விளம்பரம்-

அந்த வீடியோ 2மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூடுயூபில் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் வந்தது. இருப்பினும் இந்த வீடியோவிற்கு கீழ் பலரும் கேலி செய்து கமன்ட் செய்தனர்..மேலும் இவரது பாத் ரூம் டூர் வீடியோவை பல யூடுயூபர்ஸ் Troll செய்து வீடியோ வே;வெளியிட்டனர். அப்போது Gp முத்துவும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் பேசிய அவர் ‘பாத் ரூம் எல்லாம் காமிச்சால் Troll பண்ணத்தான் செய்வான். அவங்க Troll பண்ணதால் உங்க வீடியோ அவ்வளவு Reach ஆனது.

அதனால் நீங்கள் report அடித்த யூடுயூப் பக்கத்தை எல்லாம் Strike எடுத்துவிடுங்கள்’ என்று பேசி இருந்தார். இப்படி ஒரு நிலையில் ‘Oh My Ghosh’ படத்தின் இசை வெளியிட்டு விழாவில் அர்ச்சனாவை பார்த்த Gp முத்து ஒரு கணம் பயந்து ‘அக்காவ பாத்ததும் கொஞ்சம் பயமா இருந்துச்சி, உங்கள பத்தி வீடியோ ஒன்னு போட்டேன், நீங்க யேசுவீங்கன்னு பயந்துட்டேன்’ என்று gp முத்து சொல்ல உடனே அர்ச்சனா அவரது அருகில் வந்து கை குலுக்கிவிட்டு சென்றார்.

Advertisement