தன் நண்பனின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் தன் வீட்டில் Gp முத்து செய்த விஷயம் – என்னா மனுஷன்யா.

0
560
gp
- Advertisement -

”டிக்டாக் நண்பர்களே” என்ற வார்த்தையை கேட்டதும் ரசிகர்களுக்கு நினைவிற்கு வருவது ஜி பி முத்து தான். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர் ஜி பி முத்து. இவர் 3 ஆவது வரைக்கும் படித்தவர். இவரது நெல்லை பேச்சுக்கும், நையாண்டியாகப் பதிவேற்றும் வீடியோவிற்கும் என்று ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது.இவர் யூடுயூப், இன்ஸ்டாகிராம் என்று எல்லா சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை பதிவிட்டு பிரபலமானார். ஸ்டூடியோ கிடையாது , கவர்ச்சி புகைப்படம் கிடையாது, எடிட் கிடையாது , வித விதமான துணி கிடையாது, பார்வையாளர்களை சப்ஸ்கிரைப் செய்ய சொல்வது கிடையாது, இருப்பினும் சப்ஸ்கிரைப் வளரும் யூடுயூப் சேனல்.

-விளம்பரம்-

மேலும், இவர் விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார்.இந்த சீசனில் பங்கேற்ற போட்டியாளர்களிலேயே அதிகமான ரசிகர்களை கொண்டவர் ஜி பி முத்து தான். இந்த சீசனில் ஜிபி முத்து கண்டிப்பாக டாப் 5 போட்டியாளர்களில் நிட்சயம் வருவார் என்று அவரின் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து இருந்தார்கள். ஆனால், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஜிபி முத்து திடீரென பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார்.

- Advertisement -

இதையும் பாருங்க : தவறான எண்ணத்தில் தொட்ட நபர், பொன்னியின் செல்வன் பூங்குழலி செய்துள்ள தரமான செயல்.

கடந்த சில தினங்களாக ஜிபி முத்து தன் குடுமபத்தினர் நினைப்பாக இருக்கிறது. அதனால் நான் வீட்டிற்கு போக வேண்டும் என்று கூறி வந்தார். அவரை பிக் பாஸும் அழைத்து எத்தனையோ சமாதானம் செய்தது. ஆனாலும், தனக்கு தன் பிள்ளை நினைவாகவே இருக்கிறது. நான் போய்தான் ஆக வேண்டும் என்று உறுதியாக இருந்தார். எனக்கு புகழ், பணத்தை விட என் பிள்ளை தான் முக்கியம் என்று கூறிவிட்டு பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார்.

-விளம்பரம்-

எப்போதும் சந்தோசமாக வீடியோ வெளியிடும் ஜி பி முத்து கடந்த ஆண்டு இதே நாளில் தனது நண்பனின் இழப்பால் கண்ணீருடன் வீடியோ அதில் ‘நான் எல்லாரையும் சிரிக்க வைத்தேன் ஆனால் என்னை ஆண்டவன் வைத்து விட்டான் என் நண்பன் என்னை விட்டு சென்று விட்டான் கண்டிப்பாக ஆண்டவன் என்ன அழ வச்சிட்டான் என்று கதறி அழுது இருந்தார் ஜி பி முத்து. இந்த வீடியோவை கண்ட பலரும் அவருக்கு ஆறுதல் கூறிவந்தனர்.

தனது நண்பர் இறந்த சில மாதங்களுக்கு முன்னர் ஜி பி முத்து கார் ஒன்றை வாங்கியிருந்தார். அப்போது கூட அந்த காரில் யாரையும் நீங்கள் முதலில் ஏற்றிக் கொண்டீர்கள் என்று கேட்கப்பட்ட போது நான் என்னுடைய நண்பரை தான் ஏற்றிச் சென்றேன் என்று கூறியிருந்தார். அந்த அளவிற்கு நாம் அவர்கள் மீது மிகுந்த அன்பும் நன்றியும் கொண்டவர் ஜி பி முத்து. அந்த அளவிற்கு தன் நண்பர் மீது பாசமாக இருந்தார்.

அவ்வளவு ஏன் பிக் பாஸில் கூட தனது நண்பர் பற்றி மிகவும் மனமுருக பேசி இருந்தார். மேலும், தனது நண்பனின் நினைவாக அவரது புகைப்படத்தை வைத்து வழிபட்டு வருகிறார் ஜிபி முத்து. இப்படி ஒரு நிலையில் இன்று தனது நண்பரின் முதலாம் ஆண்டு நினைவு நாள் என்பதால் தனது வீட்டிலேயே தன் நண்பனின் புகைப்படத்திற்கு மலர் அணிவித்து படையல் போட்டு கும்பிட்டு இருக்கிறார்.

Advertisement