தப்பு தப்பா விளையாடாதீங்க. டென்ஷனான ஜி.பி முத்து. காட்டு கத்து கத்திய ரட்சிதா – அனல் பறக்கும் பிக்பாஸ்

0
405
GP
- Advertisement -

டென்ஷன் ஆகி மைக்கில் ரக்ஷிதா கத்தி இருக்கும் பிக் பாஸ் 6 நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அனைவரும் ஆவலுடன் காத்து கொண்டு இருந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விஜய் டிவியில் பிரம்மாண்டமாக தொடங்கி இரண்டு நாட்கள் ஆகி விட்டது. இதனால் ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டு இருக்கிறது. அதேபோல் கமல் தான் இந்த சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

அதாவது, இந்த நிகழ்ச்சி தினமும் டிவியில் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும். டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. நிகழ்ச்சியில் ஜிபி முத்து, அசீம், அசல் கொலார், ராபர்ட், ஷெரினா, அசீம், ராமசாமி, ஆர்யன் தினேஷ் என்ற ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி அரவிந்த், விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி என பல பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6:

இந்த முறை நிகழ்ச்சி ஆரம்பத்தில் 20 போட்டியாளர்கள் களம் இறங்கி இருக்கின்றனர். நிகழ்ச்சி தொடக்கத்தில் போட்டியாளர்கள் குறித்து கூறப்பட்டு இருந்தது. இந்த முறையும் பலர் புது முகங்களாக இருக்கின்றனர். முதல் நாளில் போட்டியாளர்கள் எல்லோருமே தங்களை பற்றி அறிமுகம் செய்து கொண்டு வழக்கம்போல் முதல் நாளில் ஜாலியாகவும் அன்போடும், பாசத்தோடும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில் மைக்கில் வெறிகொண்ட மிருகமாய் ரக்ஷிதா கத்திருக்கும் புரோமோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

ஆரம்பித்த சண்டை:

பொதுவாகவே, பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரத்திற்கு பிறகு தான் போட்டியாளர்கள் சண்டை, சச்சரவு தொடங்கும். ஆனால், இந்த முறை நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலேயே போட்டியாளர்களுக்குள் சலசலப்பு தொடங்கிவிட்டது. அதேபோல் பிக் பாஸும் முதல் நாளே போட்டியாளர்களுக்குள் மத்தியில் தன்னுடைய விளையாட்டை தொடங்கிவிட்டார். அந்த வகையில் முதல் நாளில் நான்கு பேர் நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்றிருந்தார்கள். இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

இன்றைய ப்ரோமோ:

அதில், சிவினிடம் விஜே மகேஸ்வரி பேசுகிறார். ஆனால், விஜே மகேஸ்வரி சொல்வதை கேட்காமல் சிவினின் கத்துகிறார். அதே போல் ஜிபி முத்து டீமுக்கும், ரக்ஷிதா டீமுக்கும் வாக்குவாதம் வருகிறது. அப்போது நீங்கள் விளையாடும் முறை சரி இல்லை என்று இரு அணிகளுக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் கோபமடைந்து ரக்ஷிதா மைக்கின் முன்பு சத்தமாக கத்துகிறார். தற்போது அந்த புரோமோ தான் வைரலாகி வருகிறது.

Advertisement