வளர்ப்பு குறித்து ஜிபி முத்து பேசியிருக்கும் கருத்து தற்போது பிக் பாஸ் வீட்டில் காட்டுத்தீயாய் கொழுந்து விட்டு எரிந்து கொண்டு வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி நான்கு நாட்கள் ஆகி விட்டது. இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து, அசீம், அசல் கொலார், ராபர்ட், ஷெரினா, ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறார்கள். வழக்கம் போல் கமல் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார். இந்த முறையும் பலர் புது முகங்களாக இருக்கின்றனர். நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே போட்டியாளர்களுக்குள் டாஸ்க் கொடுக்கப்பட்டது. முதல் நாளிலேயே பிக் பாஸ் கொடுத்த டாஸ்கில் நான்கு பேர் இந்த வார நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்கள்.
பிக் பாஸ் சீசன் 6:
இப்படி ஆரம்பமே அமர்க்களமாக ஆரம்பித்ததால் போட்டியாளர்கள் மத்தியில் முதல் நாளே சர்ச்சை தொடங்கியது. அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் கொடுத்த டாஸ்க்கில் குறைவான வாக்குகளை பெற்றவர்கள் வீட்டின் வெளியே வாழைப்பழ பெட்டி படுகையில் இரவு முழுவதும் படுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்படி விக்ரமன், ஜனனி, ஆயிஷா, தனலட்சுமி ஆகிய நான்கு பேரும் நேரடியாக நாமினேஷன் லிஸ்டில் இடம் பெற்றது மட்டும் இல்லாமல் தண்டனையும் அனுபவித்திருந்தார்கள்.
பிக் பாஸ் கொடுத்த டாஸ்க்:
பின் பிக் பாஸ் அவர்கள் இந்த நாமினேஷன் லிஸ்டில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் இந்த வாரம் முழுவதும் சிறப்பாக விளையாட வேண்டும் என்று ஒரு வாய்ப்பையும் கொடுத்திருக்கிறார். இதனால் போட்டியாளர்களும் கவனமாக விளையாடி வருகிறார்கள். அதோடு பிற போட்டியாளர்களை தாக்கியும் வருகிறார்கள். அந்த வகையில் இந்த நிகழ்ச்சி ஆரம்பத்திலேயே ஜி பி முத்துவுக்கும் தனலட்சுமிக்கும் விவாதம் ஏற்பட்டிருக்கிறது.
ஜி பி முத்து-தனலட்சுமி சன்டை:
தனலட்சுமி, ஜிபி முத்துவை பார்த்தாலே கடுப்பாகிறது என்று கேமரா முன் புலம்பி இருந்தார். அது மட்டும் இல்லாமல் ஜிபி முத்துவிடம் ஏன் நீங்கள் நடிக்கிறீர்கள்? என்று நேரடியாக கேட்டதால் ஜிபி முத்து கடுப்பாகி நான் நடிக்கிறேனா? இல்லையா? என்று பிக் பாஸுக்கு தெரியும் என்று இருவரும் வாக்குவாதத்தில் இறங்கினார்கள். இதை பார்த்த ஜி பி முத்துவின் ரசிகர்கள் தனலட்சுமியை வறுத்தெடுத்து வருகின்றனர்.
வார்ப்பு குறித்து ஜி பி முத்து சொன்னது:
இந்த நிலையில் நிகழ்ச்சியில் வளர்ப்பு குறித்து பேசி இருப்பதற்கு பெரும் பூகம்பம் பிடித்திருக்கிறது.ஜி பி முத்து அவர்கள் கூறியிருந்தது, ஒரு அப்பா தான் பிள்ளையை வா, போ என்று கூப்பிட்டா கூட தனலட்சுமிக்கு பிடிக்காதம்மா. அது என்ன பழக்கம்னு தெரியவில்லை. என்ன வளர்ப்போ! என்று பேசி விடுகிறார். இதனால் பிற போட்டியாளர்களும் முத்துவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை தெரிவித்து இருக்கின்றனர்.
சம்யுக்தாவை போல Gp முத்துவையும் கண்டிப்பாரா கமல் :
ஏற்கனவே கடந்த பிக் பாஸ்களில் வளர்ப்பு பற்றி பேசி பெரும் சர்ச்சை வந்தது. தற்போது அதே பிரச்சனையை ஜிபி முத்து ஆரம்பித்திருக்கிறார்.இதற்கு வார இறுதியில் கமலஹாசன் என்ன சொல்லப் போகிறார்? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். அது மட்டும் இல்லாமல் நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரம் கழித்து தான் போட்டியாளர்களுக்குள் சச்சரவு, சண்டை உருவாகும். ஆனால், இந்த முறை முதல் இரண்டு நாட்களிலேயே போட்டியாளர்களுக்கு மத்தியில் கலவரம் தொடங்கிவிட்டது.