பிக் பாஸ் வீட்டில் 14 நாட்கள் இருந்து Gp முத்து வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா ?

0
918
gpmuthu
- Advertisement -

இதுவரை பிக் பாஸ் வீட்டில் ஜிபி முத்து மொத்தமாக வாங்கி இருக்கும் சம்பளம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகி விட்டது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம், அசல், ஷெரினா, ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறது. பின் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருக்கிறார். இந்த முறை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்து இருக்கிறது. இதனால் போட்டியாளர்கள் ஓவ்வொருவரும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். இதில் போட்டியாளராக கலந்து கொண்டவர் ஜி பி முத்து. இந்த சீசனில் பங்கேற்ற போட்டியாளர்களிலேயே அதிகமான ரசிகர்களை கொண்டவர் ஜி பி முத்து தான்.

- Advertisement -

ஜிபி முத்து குறித்த தகவல்:

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர் ஜி பி முத்து. இவர் 3ஆவது வரைக்கும் படித்தவர். ”டிக்டாக் நண்பர்களே” என்ற வார்த்தையை கேட்டதும் ரசிகர்களுக்கு நினைவிற்கு வருவது இந்த ஜி பி முத்து தான். இவரது நெல்லை பேச்சுக்கும், நையாண்டியாகப் பதிவேற்றும் வீடியோவிற்கும் என்று ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர் யூடுயூப், இன்ஸ்டாகிராம் என்று எல்லா சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை பதிவிட்டு பிரபலமானார்.

பிக் பாஸ் வீட்டில் ஜிபி முத்து:

‘ஸ்டூடியோ கிடையாது , கவர்ச்சி புகைப்படம் கிடையாது, எடிட் கிடையாது , வித விதமான துணி கிடையாது, பார்வையாளர்களை சப்ஸ்கிரைப் செய்ய சொல்வது கிடையாது, இருப்பினும் வேகமாக வளரும் யூடுயூப் சேனல். இதனால் ஒட்டுமொத்த பிக்பாஸ் ரசிகர்கள் கண்ணும் ஜிபி முத்து மீது தான் இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜிபி முத்து கலக்கி கொண்டு இருந்தார். முன்பு விட தற்போது தான் ஜி பி முத்துவிற்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக சேர்ந்திருக்கிறது.

-விளம்பரம்-

வீட்டை விட்டு வெளியேறிய முத்து:

ஆனால், சில தினங்களாக இவர் தன் மகனை பார்க்க வேண்டும் என்ற ஏக்கத்தில் இருந்தார். அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் இடமும் நான் வெளியே போக வேண்டும். என்னை வெளியே அனுப்பி விடுங்கள் என்றெல்லாம் கூறி இருந்தார். இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஜி பி முத்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இது பலருக்குமே ஷாக்கை கொடுத்திருக்கிறது. மேலும், இவர் பிக் பாஸ் வீட்டில் கிட்டத்தட்ட 14 நாட்கள் இருந்திருக்கிறார். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இவர் பெற்றிருக்கும் சம்பளம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ஜிபி முத்து வாங்கிய சம்பளம்:

பிக் பாஸ் வீட்டில் இவருக்கு ஒரு நாளைக்கு 15,000 முதல் 18 ஆயிரம் வரை சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் குறைந்தபட்சம் இவருக்கு ஒரு நாளைக்கு 15,000 என்று கணக்கு போட்டால் இவர் மொத்தம் 14 நாட்கள் இருந்திருக்கிறார். ஆகவே 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் இவர் பிக் பாஸ் வீட்டிலிருந்து சம்பாதித்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும், பிக் பாஸ் வீட்டிலேயே ஜி பி முத்துவிற்கு தான் ரசிகர்கள் மத்தியில் அதிக ஆதரவு இருந்தது. இவர் டைட்டில் வின்னர் ஆவதற்கு கூட வாய்ப்பு இருப்பதாக பலரும் கூறியிருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் இந்த வாய்ப்பை ஜிபி முத்து தவற விட்டிருக்கிறார்.

Advertisement