மனைவிக்கு சிம்பிளான சேலை, பிள்ளைகளுக்கு பெட்டி பெட்டியாய் பட்டாசு – Gpmuthu தீபாவளி கொண்டாட்டம். மனுஷ இப்போ தான் ஹாப்பி.

0
395
Gpmuthu
- Advertisement -

குடும்பத்துடன் சந்தோஷமாக தீபாவளியை கொண்டாடி இருக்கும் ஜி பி முத்துவின் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ”டிக்டாக் நண்பர்களே” என்ற வார்த்தையை கேட்டதும் ரசிகர்களுக்கு நினைவிற்கு வருவது ஜி பி முத்து தான். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர் ஜி பி முத்து. இவர் 3 ஆவது வரைக்கும் படித்தவர். இவரது நெல்லை பேச்சுக்கும், நையாண்டியாகப் பதிவேற்றும் வீடியோவிற்கும் என்று ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

-விளம்பரம்-
gpmuthu

இவர் யூடுயூப், இன்ஸ்டாகிராம் என்று எல்லா சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை பதிவிட்டு பிரபலமானார். ஸ்டூடியோ கிடையாது , கவர்ச்சி புகைப்படம் கிடையாது, எடிட் கிடையாது , வித விதமான துணி கிடையாது, பார்வையாளர்களை சப்ஸ்கிரைப் செய்ய சொல்வது கிடையாது, இருப்பினும் சப்ஸ்கிரைப் வளரும் யூடுயூப் சேனல். மேலும், இவர் விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார்.

- Advertisement -

பிக் பாஸ்ஸில் ஜிபி முத்து:

இந்த சீசனில் பங்கேற்ற போட்டியாளர்களிலேயே அதிகமான ரசிகர்களை கொண்டவர் ஜி பி முத்து தான்.
இந்த சீசனில் ஜிபி முத்து கண்டிப்பாக டாப் 5 போட்டியாளர்களில் நிட்சயம் வருவார் என்று அவரின் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து இருந்தார்கள். ஆனால், கடந்த வாரம் ஜிபி முத்து திடீரென பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார். கடந்த சில தினங்களாக ஜிபி முத்து தன் குடுமபத்தினர் நினைப்பாக இருக்கிறது. அதனால் நான் வீட்டிற்கு போக வேண்டும் என்று கூறி வந்தார்.

நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய ஜிபி முத்து:

அவரை பிக் பாஸும் அழைத்து எத்தனையோ சமாதானம் செய்தது. ஆனாலும், தனக்கு தன் பிள்ளை நினைவாகவே இருக்கிறது. நான் போய்தான் ஆக வேண்டும் என்று உறுதியாக இருந்தார். பின் கமல், ஜிபி முத்துவிடம் இந்த நிகழ்ச்சியால் எந்த அளவு புகழ் வரும் என்பது உங்களுக்கு தெரியும் என்று சொன்னார். ஆனால், எனக்கு புகழ், பணத்தை விட என் பிள்ளை தான் முக்கியம் என்று கூறிவிட்டு பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார். இது பலருக்குமே ஷாக்கை கொடுத்திருக்கிறது.

-விளம்பரம்-

ஜிபி முத்து மகன்:

மேலும், இவர் பிக் பாஸ் வீட்டில் கிட்டத்தட்ட 14 நாட்கள் இருந்திருக்கிறார். மேலும், நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த உடன் ஜி பி முத்து அவர்கள் தன்னுடைய மகன் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார். அந்த புகைப்படத்தில் ஜிபி முத்து மகனின் உடல் முழுவதும் ஒயர்கள் இருந்தது. அது பார்ப்பதற்கு கஷ்டமாக இருந்தது. ரசிகர்கள் பலருமே ஜிபி முத்துவிற்கு ஆறுதலும் கூறியிருந்தார்கள்.

ஜிபி முத்து வெளியிட்ட வீடியோ:

இந்த நிலையில் ஜிபி முத்து தனது youtube சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், தன்னுடைய பிள்ளைகளுடன் சேர்ந்து தீபாவளியை கொண்டாடி இருக்கிறார். அந்த வீடியோவை தான் அவர் சோசியல் மீடியாவில் பகிர்ந்திருக்கிறார். இதை பார்த்த பலரும் ஜி பி முத்துவிற்கு தீபாவளி வாழ்த்துக்கள் கூறி இருந்தார்கள்.

Advertisement