தன் மனைவியின் ஊனத்தை கேலி செய்த ரவுடி பேபி, Gp முத்து கொடுத்த பதிலடி – தற்போது வைரலாகும் வீடியோ.

0
569
rowdy
- Advertisement -

ரவுடி பேபி சூர்யாவை தாறுமாறாக வறுத்து எடுத்திருக்கும் ஜி பி முத்து உடைய பழைய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி 13 நாட்கள் ஆகி விட்டது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம், அசல் கொலார், ஜிபி ஷெரினா, ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறது. பின் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருக்கிறார். இந்த முறை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்து இருக்கிறது. மேலும், இரண்டாம் வாரத்திற்கான டாஸ்கை பிக் பாஸ் கொடுத்து இருக்கிறார். போட்டியாளர்கள் ஓவ்வொருவரும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க, பொதுவாகவே நிகழ்ச்சி தொடங்கி சில வாரங்கள் கழித்து தான் போட்டியாளர்களுக்கு ஆர்மி துவங்கம்.

- Advertisement -

ஜிபி முத்து குறித்த தகவல்:

ஆனால், இந்த முறை நிகழ்ச்சி தொடங்கிய முதல் இரண்டு நாட்களிலேயே போட்டியாளர்களுக்கு ஆர்மி துவங்கப்பட்டது. அதில் ஜி பி முத்துவும் ஒன்று. இந்த சீசனில் பங்கேற்ற போட்டியாளர்களிலேயே அதிகமான ரசிகர்களை கொண்டவர் ஜி பி முத்து தான். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர் ஜி பி முத்து. இவர் 3ஆவது வரைக்கும் படித்தவர். ”டிக்டாக் நண்பர்களே” என்ற வார்த்தையை கேட்டதும் டிக் டாக் ரசிகர்களுக்கு நினைவிற்கு வருவது இந்த ஜி பி முத்து தான்.

பிக் பாஸ் வீட்டில் ஜிபி முத்து:

இவரது ஜி பேச்சுக்கும், நையாண்டியாகப் பதிவேற்றும் வீடியோவிற்கும் என்று ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது. இவர் யூடுயூப், இன்ஸ்டாகிராம் என்று பல சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை பதிவிட்டு பிரபலமானார். அதிலும் இவரது யூடுயூப்சேனலில் இவர் பதிவிடும் வீடியோ அனைத்தும் பெரும் வைரலானது. ‘ஸ்டூடியோ கிடையாது , கவர்ச்சி புகைப்படம் கிடையாது, எடிட் கிடையாது , வித விதமான துணி கிடையாது, பார்வையாளர்களை சப்ஸ்கிரைப் செய்ய சொல்வது கிடையாது, இருப்பினும் வேகமாக வளரும் யூடுயூப் சேனல். இதனால் ஒட்டுமொத்த பிக்பாஸ் ரசிகர்கள் கண்ணும் ஜிபி முத்து மீது தான் இருக்கிறது.

-விளம்பரம்-

ரவுடி பேபி சூர்யா சொன்னது:

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜிபி முத்து கலக்கி கொண்டு வருகிறார். முன்பு விட தற்போது தான் ஜி பி முத்துவிற்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக சேர்ந்திருக்கிறது. அது மட்டும் இல்லாமல் ஜிபி முத்து பிக் பாஸ்க்கு சென்றதிலிருந்து அவரை குறித்து ஏதாவது ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி கொண்டு தான் வருகிறது. இந்த நிலையில் ஜிபி முத்து உடைய பழைய வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில் ரவுடி பேபி சூர்யா, உனக்கு இந்த பொண்டாட்டி இருக்கும்போதே இந்த ஆட்டம் ஆடுற, இன்னும் நல்ல பொண்டாட்டி கிடைத்திருந்தால் உன்னை கையிலே பிடிக்க முடியாது என்று அவருடைய மனைவியின் குறையை குறிப்பிட்டு பேசியிருந்தார்.

ஜிபி முத்து கொடுத்த பதிலடி:

இதனால் ஆத்திரமடைந்த ஜி பி முத்து, நீ என்னைப் பற்றி எது வேணாலும் பேசு. என்னுடைய மனைவியை பற்றி பேசுவதற்கு உனக்கு எந்த தகுதியும் இல்லை. அது மட்டும் இல்லாமல் ஊனம் என்பது ஒரு குறை இல்லை. என் மனைவியை ஊனம் என்று பார்த்து காதலித்து தான் நான் திருமணம் செய்து கொண்டேன். ஊனமாய் இருப்பவர்கள் நல்லவர்கள் இல்லை என்பது சொல்வது எந்த விதத்தில் நியாயம் என்று ரவுடி பேபி சூர்யாவை வறுத்தெடுத்து இருக்கிறார். தற்போது இந்த வீடியோவை தான் சோசியல் மீடியாவில் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Advertisement